நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..!

நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட கலெக்டர்களுடன்  பிரதமர் மோடி இன்று ஆலோசனை..!
x
தினத்தந்தி 22 Jan 2022 3:05 AM GMT (Updated: 2022-01-22T08:35:44+05:30)

நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட கலெக்டர்களுடன்  பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். 

மாவட்ட அளவில் பல்வேறு திட்டங்களை துரிதமாக நிறைவேற்றுவதை நோக்கமாக கொண்டு இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.இன்று காலை 11 மணியளவில் காணொலி காட்சியில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

மாவட்டங்களில் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் .முன்னேற்றம் குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது . மக்கள் நலத்திட்டங்களை இயக்கமாக மக்களிடம் எடுத்து செல்வது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பிருப்பதாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 

Next Story