எந்தவொரு மாவட்டமும் பின்தங்கி விடக் கூடாது - கலெக்டர்களுடனான கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு


எந்தவொரு மாவட்டமும் பின்தங்கி விடக் கூடாது - கலெக்டர்களுடனான கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 22 Jan 2022 9:41 AM GMT (Updated: 22 Jan 2022 10:12 AM GMT)

எந்தவொரு மாவட்டமும் பின்தங்கி விடக் கூடாது, மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து சவாலை சந்திக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட கலெக்டர்களுடன்  பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். கலெக்டர்களுடனான ஆலோசனை கூட்டத்தில்  பிரதமர் மோடி பேசியதாவது:-

டிஜிட்டல் வடிவில் இந்தியா ஒரு புரட்சியை கண்டு வருகிறது. டிஜிட்டல் உட்கட்டமைப்பு ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைய வேண்டும். அரசின் சேவைகள் மக்களுக்கு நேரடியாக அவர்களின் வீடுகளுக்கே சென்றடைய வேண்டும். 

எந்தவொரு மாவட்டமும் பின்தங்கி விடக் கூடாது; மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து சவாலை சந்திக்க வேண்டும்.   நல்லாட்சி வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் உதவி வருகிறது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்களும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story