பசுவின் முன்னால் சிறுநீர் கழிப்பதா? வாலிபருக்கு அடி-உதை

பசுவின் முன்னால் சிறுநீர் கழிப்பதா? வாலிபருக்கு அடி-உதை
x
தினத்தந்தி 29 Jan 2022 8:01 PM GMT (Updated: 2022-01-30T01:31:48+05:30)

மத்தியபிரதேசத்தின் ராட்லம் மாவட்டத்தில், பசு மாட்டின் முன்னால் சிறுநீர் கழித்ததாக ஒருவரை மற்றொருவர் திட்டி, தாக்கினார்.

போபால், 

மத்தியபிரதேசத்தின் ராட்லம் மாவட்டத்தில், பசு மாட்டின் முன்னால் சிறுநீர் கழித்ததாக ஒருவரை மற்றொருவர் திட்டி, தாக்கினார்.

அந்த நபர் திரும்பத்திரும்ப மன்னிப்பு கோரியும், தாக்குதல் நடத்தியவர் நிறுத்தவில்லை.

இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவியது. அதைத் தொடர்ந்து, தாக்கப்பட்டவர் யார் என்று போலீசார் தேடினர்.

அதில் அந்த நபர் பெயர் சைபுதீன் பாட்லிவாலா என்று தெரியவந்தது. அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, தாக்கிய ஆசாமியான வீரேந்திர ரதோடு என்பவரை கைது செய்தனர்.

Next Story