உத்தரகாண்ட் தேர்தலில் 2 முன்னாள் முதல்-மந்திரி மகள்கள் போட்டி


உத்தரகாண்ட் தேர்தலில் 2 முன்னாள் முதல்-மந்திரி மகள்கள் போட்டி
x
தினத்தந்தி 29 Jan 2022 8:46 PM GMT (Updated: 29 Jan 2022 8:46 PM GMT)

உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் தங்கள் தந்தையின் தோல்விக்கு பதிலடி தர 2 முன்னாள் முதல்-மந்திரி மகள்கள் களம் இறங்கி உள்ளனர்.

கவனத்தை கவரும் 2 தொகுதிகள்

உத்தரகாண்ட் சட்டசபைக்கு அடுத்த மாதம் 14-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் 2 தொகுதிகள் அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த தொகுதிகள், கோட்வார் மற்றும் ஹரித்துவார் ரூரல் ஆகும்.

பி.சி.கந்தூரி

கோட்வார் தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி பி.சி.கந்தூரி 2012 தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுரேந்திர சிங் நேகி 4,600 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.

இந்த தேர்தலில் அந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக பி.சி.கந்தூரி மகள் ரீத்து கந்தூரி பூஷண் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பி.சி.கந்தூரியை வென்ற காங்கிரஸ் வேட்பாளர் சுரேந்திர சிங் நேகி களத்தில் உள்ளார்.

ஹரிஸ் ராவத்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்-மந்திரி ஹரிஷ் ராவத் 2017 தேர்தலில் ஹரித்துவார் ரூரல் தொகுதியில் தோல்வியைத் தழுவினார். அவரை எதிர்த்து களம் இறங்கிய பா.ஜ.க. வேட்பாளர் சுவாமி யதிஷ்வரானந்த் 12 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வரும் தேர்தலில் இந்த தொகுதியில் ஹரிஷ் ராவத்தின் மகள் அனுபமா ராவத் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து ஏற்கனவே ஹரிஷ் ராவத்தை வென்ற பா.ஜ.க. வேட்பாளர் சுவாமி யதிஷ்வரானந்த் களம் இறங்கி உள்ளார்.

பழி தீர்ப்பார்களா?

தந்தை பி.சி.கந்தூரியின் தோல்விக்கு மகள் ரீத்து கந்தூரி பூஷணும், ஹரிஷ் ராவத்தின் தோல்விக்கு அவரது மகள் அனுபமா ராவத்தும் பழி தீர்ப்பார்களா என்பது வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிற மார்ச் 10-ந் தேதி தெரியும்.


Next Story