மேற்கு வங்க கவர்னருக்கு எதிரான பொதுநல மனு - கொல்கத்தா ஐகோர்ட்டு தள்ளுபடி


மேற்கு வங்க கவர்னருக்கு எதிரான பொதுநல மனு - கொல்கத்தா ஐகோர்ட்டு தள்ளுபடி
x
தினத்தந்தி 18 Feb 2022 6:17 PM GMT (Updated: 18 Feb 2022 6:17 PM GMT)

மேற்கு வங்க கவர்னருக்கு எதிரான பொதுநல மனுவை கொல்கத்தா ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநில கவர்னர் ஜகதீப் தங்கார், ஒரு சார்புடன் செயல்படுவதாகவும், அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் ராம்பிரசாத் சர்க்கார் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு கொல்கத்தா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ராஜ்ரஷி பரத்வாஜ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசியலமைப்பு சாசனம் 361-வது பிரிவின் கீழ் நாட்டின் எந்தவொரு நீதிமன்றமும் கவர்னரை எதிர்மனுதாரராக சேர்த்து பதிலளிக்க உத்தரவிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக கவர்னரின் செயல்பாடுகள் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் பட்சத்தில் மட்டுமே நீதிமன்றங்கள் தலையிட முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் கவர்னரை திரும்ப பெறக்கூறி மத்திய அரசுக்கு உத்தரவிடுவதற்கு பொதுநல மனுவில் போதிய முகாந்திரம் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Next Story