ஏப். 4 முதல் சுப்ரீம் கோர்ட்டில் நேரடி விசாரணை


ஏப். 4 முதல் சுப்ரீம் கோர்ட்டில் நேரடி விசாரணை
x
தினத்தந்தி 30 March 2022 12:09 PM IST (Updated: 30 March 2022 12:09 PM IST)
t-max-icont-min-icon

ஏப்ரல் 4-ம் தேதி முதல் சுப்ரீம் கோர்ட்டில் நேரடி விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா பாதிப்பு காரணமாக, காணொலி காட்சி வாயிலாகவும், வாரத்தில் இரு நாள்கள் நேரடியாகவும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வரும் வாரத்திலிருந்து முழு அளவில் நேரடி விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்குரைஞர்கள் கோரிக்கை வைத்தால் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காணொலி வாயிலாக விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு முந்தைய நடைமுறைகள், வரும் திங்கள்கிழமை முதல் சுப்ரீம் கோர்ட்டில் பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story