ரோப் கார்கள் செயல்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய அரசு வெளியீடு


ரோப் கார்கள் செயல்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய அரசு வெளியீடு
x

ரோப் கார்களை செயல்படுத்துவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

மலைப்பகுதிகளில் சுற்றுலா பயணிகளை கவரும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக ரோப் கார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பயணித்தவாறு மலைகளின் இயற்கை அழகை ரசிக்கும் அதே நேரம் இதில் ஆபத்தும் உள்ளது என்பதை உணர்த்தும் விதமாக அவ்வபோது விபத்துகள் நிகழ்ந்து விடுகின்றன.

அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 1,500 அடி உயர திரிகூட் மலையில் ரோப் கார்கள் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படும் நிலையில், இது குறித்து விரிவான விசாரணை நடத்த ஜார்க்கண்ட் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில் ரோப் கார்களை செயல்படுத்துவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ரோப் கார்கள் செயல்படுத்துவதில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால், வருங்காலத்தில் இது போன்ற விபத்துக்களை தவிர்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

மாநில அரசு ரோப் கார் திட்டப்பணிகள், ரோப் கார் சேவை ஆகியவை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல், ஒரு உயர் அதிகாரியை நியமித்து அவ்வபோது ரோப் கார் செயல்பாடுகளை ஆய்வு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story