இந்தியாவில் மேலும் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு! புதிதாக 24 பேர் உயிரிழப்பு!


இந்தியாவில் மேலும் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு! புதிதாக 24 பேர் உயிரிழப்பு!
x
தினத்தந்தி 12 May 2022 4:13 AM GMT (Updated: 2022-05-12T09:43:09+05:30)

நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 5,24,181 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 2,897 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு சற்று குறைந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் தொற்று பாதிப்புக்கு 54 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைந்தது.  நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 5,24,181 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,31,13,413 ஆக உயர்ந்தது. தற்போது சிகிச்சையில் 19,067 பேர் உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 3,230 பேர் குணமடைந்தனர். நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 4,25,70,165 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 4,71,276 சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

நேற்று ஒரே நாளில் 14,85,292 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 190,83,96,788 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


Next Story