இரண்டாவது திருமணம் செய்த கணவர்; மொத்த குடும்பத்தையும் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய முதல் மனைவி!


இரண்டாவது திருமணம் செய்த கணவர்; மொத்த குடும்பத்தையும் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய முதல் மனைவி!
x
தினத்தந்தி 14 May 2022 3:40 PM GMT (Updated: 2022-05-14T21:10:51+05:30)

முதல் மனைவிக்கு இரண்டாவது மனைவி மீதும் அவரது மாமியார் மீதும் கசப்பு ஏற்பட்டது, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

பாட்னா,

முகமது குர்ஷித் ஆலம் (40) என்ற நபர் பீகார் மாநிலம் ப்ரவுல் நகரின் ஷேக்பூர் தோலா பகுதியில் வசித்து வந்தார். அவர் குல்ஷன் காதுன் (35) என்பவரை திருமணம் செய்து கொண்டார், அவருக்கு குழந்தை இல்லை. 

இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ரோஷன் காதுன் (28) என்பவரை மீண்டும் திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து அவருடைய இரண்டாவது மனைவி ரோஷன் காதுன் கர்ப்பமாக இருந்தார்.

அதனால் முதல் மனைவிக்கு இரண்டாவது மனைவி மீதும் அவரது மாமியார் ஜுபைதா காதுன் (65) மீதும் கசப்பு ஏற்பட்டது. அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று காலை ஏற்பட்ட குடும்பத் தகராறில் அந்த நபரின் முதல் மனைவி, தன் மீதும், குடும்பத்தினர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. 

அதில் மாமியாரும் 2வது மனைவியும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். முதல் மனைவியும், அவருடைய கணவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் அவர்களும் பலியாகினர்.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விசாரணைக்காக தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

குடும்பத் தகராறில்  மொத்த குடும்பத்தையும் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய முதல் மனைவியின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story