தீபாவளியை முன்னிட்டு ராகுல்காந்தி பாதயாத்திரைக்கு 3 நாள் ஓய்வு
ராகுல்காந்தி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் நோக்கி ஒற்றுமை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
அமராவதி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் நோக்கி ஒற்றுமை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். தமிழகம், கேரளா, கர்நாடகாவை தொடர்ந்து 43-வது நாளான ஆந்திராவில் அவர் பாதயாத்திரை மேற்கொண்டார்.
ஆந்திராவின் மந்த்ராலயத்தில் உள்ள ராகவேந்திரா கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். இதற்கிடையே தீபாவளி மற்றும் புதிய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்பு நிகழ்ச்சியையொட்டி வருகிற 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை 3 நாட்கள் பாதயாத்திரைக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக கட்சியின் நிர்வாகி ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story