கடைக்கு முன் சிறுநீர் கழித்தவரை தட்டிக்கேட்ட முதியவர் அடித்துக்கொலை: 3 பேர் கைது
ராஜஸ்தானில், கடைக்கு முன் சிறுநீர் கழித்த நபரை தட்டிக்கேட்ட முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில் கடந்த ஜூலை 4 அன்று 60 வயது முதியவர் ஒருவர் அவரது கடைக்கு வெளியே கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவரை கொலை செய்தது யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், குல்தீப் மீனா (19), ராகுல் மீனா என்ற சிந்து (18) மற்றும் பிரதீப் மீனா (19) என்ற மூன்று குற்றவாளிகளை கண்டறிந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சிசிடிவி காட்சிகள் தெளிவாக இல்லாவிட்டாலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண்பது கடினமாக இருந்தது என்றும், தொழில்நுட்ப விசாரணையின் அடிப்படையில் சிறப்புக் குழு, மூன்று குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்த நபரைக் கண்டுபிடித்து இறுதியில் மூவரையும் கைது செய்தது என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், குற்றவாளிகளில் ஒருவரான குல்தீப், முதியவரின் கடைக்கு முன் சிறுநீர் கழிக்க முயன்றபோது, முதியவர் அவரை சிறுநீர் கழிக்கவிடாமல் நிறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த குல்தீப், இரும்பு கம்பியை கொண்டு முதியவரின் தலையில் பலமுறை அடித்துள்ளார். மற்ற இருவரும்,, குல்தீபுக்கு துணையாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட மூவர் மீதும் கொலைக் குற்றத்திற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.