இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,092- பேருக்கு கொரோனா


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  14,092- பேருக்கு கொரோனா
x

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சரியத்தொடங்கியிருக்கிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நாட்டில் நேற்று முன்தினம் 16 ஆயிரத்து 561 பேருக்கு தொற்று ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 16 ஆயிரத்துக்குள் (15 ஆயிரத்து 815) அடங்கியது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்து 092- ஆக குறைந்துள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 53 ஆயிரத்து 464- ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 41 பேர் உயிரிழப்பு பதிவாகியிருக்கிறது. இதன் மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 27 ஆயிரத்து 037- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 861 ஆக குறைந்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 2,403 பேர் குணம் அடைந்துள்ளனர்.


Next Story