குமாரசாமியின் தூண்டுதலால் என் கார் மீது தாக்குதல்- முன்னாள் மந்திரி சி.பி.யோகேஷ்வர் பேட்டி


குமாரசாமியின் தூண்டுதலால் என் கார் மீது தாக்குதல்-  முன்னாள் மந்திரி சி.பி.யோகேஷ்வர் பேட்டி
x

குமாரசாமியின் தூண்டுதலால் என் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக முன்னாள் மந்திரி சி.பி.யோகேஷ்வர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு: குமாரசாமியின் தூண்டுதலால் என் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக முன்னாள் மந்திரி சி.பி.யோகேஷ்வர் குற்றச்சாட்டு கூறியுள்ளார். ராமநகரில் பா.ஜனதா முன்னாள் மந்திரி சி.பி.யோகேஷ்வா் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

குமாரசாமியின் தூண்டுதல் காரணம்

சன்னப்பட்டணாவில் கடந்த 4 ஆண்டுகளாக எந்த வளா்ச்சி பணிகளையும் செய்யவில்லை. இந்த தொகுதி மக்களை குமாரசாமி ஏமாற்றி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக சன்னப்பட்டணாவில் நடைபெற்ற எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் நான் பங்கேற்றதும் இல்லை. முதல்-மந்திரியிடம் பேசி, தொகுதி வளர்ச்சிக்காக ரூ.50 கோடி நிதியை பெற்று வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்ட சென்றேன். மாவட்ட பொறுப்பு மந்திரி வராத காரணத்தால் அடிக்கல் நாட்டு விழாவுக்கு நான் சென்றேன்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, என் கார் மீது குமாரசாமியின் ஆதரவாளர்களும், ஜனதாதளம் (எஸ் கட்சியினரும் தாக்குதல் நடத்தி உள்ளனர். குமாரசாமியின் தூண்டுதலே இதற்கு காரணம்.

மிரட்டல் அரசியல்

சன்னப்பட்டணாவில் நடந்த பிரச்சினைக்கு குமாரசாமி தான் காரணம். இந்த தாலுகாவில் உள்ள ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் பா.ஜனதாவில் சேர்ந்து வருகின்றனர். இது குமாரசாமிக்கு பிடிக்கவில்லை. அதனால் தொண்டர்களை தூண்டிவிட்டு பிரச்சினை செய்திருக்கிறார்.

குமாரசாமி எப்போதும் மிரட்டல் அரசியலே செய்து வந்திருக்கிறார். அவர் மிரட்டல்காரர். அந்த மிரட்டல்களுக்கு நான் பயப்பட மாட்டேன். வளர்ச்சி பணிகளும் அரசியல் செய்ய கூடாது.

இவ்வாறு சி.பி.யோகேஷ்வர் கூறினார்.


Next Story