போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஓட்டம் - தொடங்கி வைத்தார் துணைநிலை கவர்னர் தமிழிசை


போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஓட்டம் - தொடங்கி வைத்தார் துணைநிலை கவர்னர் தமிழிசை
x

புதுச்சேரியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஓட்டத்தை துணைநிலை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஓட்டத்தை துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

கடற்கரை காந்தி நிலையிலிருந்து நகரின் முக்கிய சாலைகள் வழியாக 5 கிலோ மீட்டர்கள் தூரம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பின்னர் மீண்டும் தொடங்கிய இடத்தில் ஓட்டத்தை நிறைவு செய்தனர்.

பின்னரை செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், நாட்டின் வளர்ச்சிக்கு போதைப் பொருள் புழக்கம் தடைக்கல்லாக உள்ளது என்றார். இதனால் இளைஞர்கள் போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.


Next Story