ராமர்கோவில் கும்பாபிஷேகம்: வாரணாசியில் இலவச படகு சேவை


ராமர்கோவில் கும்பாபிஷேகம்: வாரணாசியில் இலவச படகு சேவை
x

படகு ஓட்டுபவர்களை உள்ளடக்கிய நிஷாத் சமூகம், பகவான் ராமருடன் பிரிக்க முடியாத உறவைக் கொண்டுள்ளது.

வாரணாசி,

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் வருகிற 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஒரு அறக்கட்டளை அமைப்பினர், அன்றைய தினம் வாரணாசியில் இலவச படகு சவாரி அறிவித்து உள்ளனர்.

"படகு ஓட்டுபவர்களை உள்ளடக்கிய நிஷாத் சமூகம், பகவான் ராமருடன் பிரிக்க முடியாத உறவைக் கொண்டுள்ளது. ராமர் வனவாசம் சென்றபோது நிஷாத் ராஜ், அவர்களுக்கு படகோட்டியதுடன் பல உதவிகள் செய்து உள்ளார்.

அந்த பாரம்பரியத்தை முன்னெடுக்கும் வகையில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் 22-ந்தேதி, இலவச படகு சேவை வழங்க தீர்மானித்து உள்ளோம். வாரணாசியில் கங்கையின் 82 படகு நிறுத்தங்களுக்கும் இலவச பயணம் செய்யலாம்" என்று மா கங்கா நிஷாத்ராஜ் சேவை அறக்கட்டளை அறிவித்து உள்ளது.


Next Story