9.20 ஏக்கர் பரப்பளவில் சிக்பள்ளாப்பூரில் புதிய பூ மார்க்கெட்


9.20 ஏக்கர் பரப்பளவில்  சிக்பள்ளாப்பூரில் புதிய பூ மார்க்கெட்
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-24T00:16:53+05:30)

சிக்பள்ளாப்பூரில் 9,20 ஏக்கர் பரப்பளவில் புதிய பூ மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது.

கோலார் தங்கவயல்:

சிக்பள்ளாப்பூரில் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் போதிய இட வசதி இல்லாததால் பூ சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தனியார் பூ மார்க்கெட் அமைக்கவேண்டும் என்று நீண்டநாட்களாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி கடந்த மாதம் பூ வியாபாரத்திற்கு என்று 9.20 ஏக்கர் நிலம் தனியாக ஒதுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டது. இந்த நிலையில் சிக்பள்ளாப்பூரில், புதிய பூ மார்க்கெட் நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டது.

அதன்படி தற்போது மார்க்கெட்டில் பூ விற்பனை படுஜோராக நடக்கிறது. மேலும் பல்வேறு வண்ணங்களில் பலவிதமான பூக்கள் வரத்து உள்ளது. விவசாயிகள், வியாபாரிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.


Next Story