வாலிபர் கொலையில் 2 பேர் கைது


வாலிபர் கொலையில்   2 பேர் கைது
x

வாலிபர் கொலையில் 2 பேர் கைது

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் அருகே இந்திரசுகுர் கேம்ப் பகுதியில் வசித்து வந்தவர் நரசிம்மலு (வயது 35). இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடு புகுந்து மர்மநபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்து இருந்தனர். இதுகுறித்து இடப்பனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நரசிம்மலுவை கொலை செய்ததாக இந்திரசுகுர் கேம்ப்பில் வசித்து வரும் ஈரய்யா, அவரது நண்பர் ராமய்யா ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் நரசிம்மலுவின் கொழுந்தியாளை ஈரய்யா திருமணம் செய்து கொள்ள விரும்பி உள்ளார். ஆனால் ஈரய்யாவுக்கு, கொழுந்தியாளை திருமணம் செய்து கொடுக்க விருப்பம் இல்லாத நரசிம்மலு, கொழுந்தியாளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்து உள்ளார். இதுதொடர்பான தகராறில் கொலை நடந்ததும் தெரியவந்துள்ளது.


Next Story