தேசிய கீத பாடல் போட்டி தேசப்பற்றை ஊக்குவிக்கிறது டெல்லி அரசு பள்ளி முதல்வர் பேச்சு


தேசிய கீத பாடல் போட்டி தேசப்பற்றை ஊக்குவிக்கிறது  டெல்லி அரசு பள்ளி முதல்வர் பேச்சு
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 22 Sep 2022 6:45 PM GMT)

தேசிய கீதபாடல் போட்டி தேசப்பற்றை ஊக்குவிக்கிறது என்று டெல்லி அரசு பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஆனேக்கல்:

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா கெப்பகோடியில் உள்ள எஸ்.எப்.எஸ் கல்லூரியில் கல்லூரியில் தேசிய கீதம் பாடும் போட்டி நடந்தது. இந்த போட்டியை டெல்லியை சேர்ந்த அரசு பள்ளியின் முதல்வர் அனுபமா ராமச்சந்திரா தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாணவர்கள் நாட்டின் கலாசாரம் குறித்து விழிப்புணர்வை வளர்க்க வேண்டும். சுதந்திரத்தின்போது இந்த பாடல்கள் முழு நாட்டையும் ஒன்றிணைத்தது. அனைவருக்கும் போராடும் உணர்வுகளை தூண்டியது. விவசாய நிலங்களில் பணியாற்றுபவர்கள் கூட தேசிய கீதம் பாடு நிலை இருந்து வந்தது. எப்போது திரைப்பட பாடல்கள் வந்ததோ அப்போதில் இருந்து நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் தேசபக்தி பாடல்கள் காணாமல் போய்விட்டது. இந்நிலையில் தேசிய கீதப்பாடல் போட்டிகள் நடந்திருப்பது, தேசப்பற்றை மீண்டும் ஊக்குவிக்கிறது

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story