நாகலாந்தில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி : 5 வது முறையாக முதல்-மந்திரியாகும் நெய்பியு ரியோ


நாகலாந்தில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி : 5 வது முறையாக முதல்-மந்திரியாகும் நெய்பியு ரியோ
x

கோப்புப்படம்

நாகாலாந்தில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட என்.டி.பி.பி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.

கோகிமா,

நாகலாந்து மாநிலத்தில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பா.ஜனதா 12 இடங்களிலும் கூட்டணி கட்சியான என்.டி.பி.பி., 25 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனையடுத்து ஆட்சி அமைக்க தேவையான இடத்தை காட்டிலும் பெரும்பான்மைபெற்று மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.

இந்நிலையில் கூட்டணிகட்சிகளின் சார்பில் என்.டி.பி.பி.,கட்சியை சேர்ந்த நெய்பியுரியோ 5 வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார். முன்னதாக மூத்த அரசியல் தலைவர் எஸ்சி ஜாமிர் மூன்று முறை முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார். அவரது சாதனையை தற்போது நெய்பியுரியோ முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு அங்காமி தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி நிப்பியு ரியோ 17,045 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அலோங்டாகி தொகுதியில் போட்டியிட்ட பாஜனதா மாநில தலைவர் டெம்ஜென் இம்னா அலோங் 9,274 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

நாகலாந்து மாநில அரசியல் வரலாற்றில் முதன்முறையாக இரு பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மேற்கு அங்காமி தொகுதியில் போட்டியிட்ட என்.டி.பி.பி வேட்பாளர் சல்ஹிடியூனோ குரூஸ் வெற்றி பெற்றார். தீமாப்பூர் 3-வது தொகுதியில் போட்டியிட்ட என்.டி.பி.பி வேட்பாளர் ஹக்கானி ஜக்காலு வெற்றி பெற்றார்.

நாகாலாந்து மாநில தேர்தல் முடிவுகள்: மொத்த தொகுதிகள் - 60 : தேர்தல் நடைபெற்றவை- 60 : முடிவுகள் அறிவிக்கப்பட்டவை- 56

பாஜனதா -12

சுயேட்சைகள் -4

லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) -2

நாகா மக்கள் முன்னணி- 2

தேசிய மக்கள் கட்சி- 5

தேசியவாத காங்கிரஸ் கட்சி- 6

தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி - 23

குடியரசு கட்சி (அத்வாலே)- 2


Next Story