எம்ஜிஆர் நோக்கத்திற்கு எதிராக ஓபிஎஸ் செயல்பாடு - சுப்ரீம் கோர்ட்டில் ஈபிஎஸ் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு


எம்ஜிஆர் நோக்கத்திற்கு எதிராக ஓபிஎஸ் செயல்பாடு - சுப்ரீம் கோர்ட்டில் ஈபிஎஸ் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 1 July 2022 8:47 AM GMT (Updated: 2022-07-01T17:18:28+05:30)

ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினரின் செயல்பாடு எம்.ஜி.ஆரின் நோக்கத்திற்கு எதிராக உள்ளதாக ஈபிஎஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட 378 பக்கங்கள் கொண்ட மனுவில் ஓபிஎஸ் மீது எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டில் ஈபிஎஸ் தாக்கல் செய்த மனுவில் தகவல்.

* எம்.ஜி.ஆர் நோக்கத்திற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வத்தின் செயல்பாடுகள் உள்ளது.

* கட்சியின் அடிப்படை நோக்கத்திற்கு எதிராகவும் அதிமுக உருவாக்கப்பட்டதற்கு எதிராகவும் ஓ.பன்னீர் செல்வம் செயல்படுகிறார்.

*அதிமுக விவகாரங்களில் முடிவெடுக்கும் உரிமை பொதுக்குழுவின் அதிகாரத்துக்குட்பட்டது.

*ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினரின் செயல்பாடு எம்.ஜி.ஆரின் நோக்கத்திற்கு எதிராக உள்ளது.

* எதிர்மனு தாரருக்கு வீட்டோ அதிகாரம் தருவது போல் கட்சி தலைமை பற்றி விவாதிக்க கூடாது என்ற ஆணை உள்ளது.

*அதிமுகவின் ஜனநாயக அமைப்பு முறையில் தலையிடுவது போல் ஐகோர்ட் நீதிபதிகளின் உத்தரவு உள்ளது.

* ஐகோர்ட் நீதிபதிகளின் உத்தரவை செயல்படுத்தினால் கட்சியின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும்.

எம்.ஜி.ஆர் நோக்கத்திற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story