வாலிபர் கடத்தி கொலை


வாலிபர் கடத்தி கொலை
x

ஹாசனில் வாலிபரை கடத்தி கொலை செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஹாசன், பிப்.9-

வாலிபர் மாயம்

ஹாசன் டவுன் ஒய்சாலா நகரை சேர்ந்தவர் லிகித் கவுடா (வயது 26). இவர் அந்தப்பகுதியில் எலெக்ட்ரானிக் பொருட்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியே செல்வதாக கூறி சென்ற லிகித் கவுடா வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் லிகித் கவுடா கிடைக்கவில்லை.

இதுகுறித்து லிகித் கவுடாவின் உறவினர்கள் ஹாசன் டவுன் போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லிகித் கவுடாவை தீவிரமாக தேடி வந்தனர்.

மர்மம்

இந்த நிலையில், லிகித் கவுடாவை அவரது நண்பரான நவீனும், சாகரும் தான் மாயமான அன்று போன் செய்து அழைத்து சென்றதாக போலீசில் அவரது மனைவி தெரிவித்தார். ஆனால், சாகர்

மற்றும் நவீனும் மாயமாகி இருந்தனர். 3 பேரின் செல்போன்களும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் இந்த வழக்கில் மர்மம் நிலவியது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், ஹாசன் அருகே யோகிஹள்ளி கிராமத்தையொட்டி உள்ள வனப்பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கடத்தி கொலை

இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக மீட்கப்பட்டவர் மாயமானதாக தேடப்பட்டு வந்த லிகித் கவுடா என்பது தெரியவந்தது. மேலும் அவரை சாகர் மற்றும் நவீன் ஆகியோர் கடத்தி சென்று கொலை செய்ததும் தெரியவந்தது. ேமலும் லிகித் கவுடாவிடம் நவீன் ரூ.25 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.

அந்த பணத்தை திரும்ப கொடுக்காததால், நவீனின் மோட்டார் சைக்கிளை லிகித் கவுடா பறித்து சென்றுள்ளார். இதனால் அவர் மீது நவீன் கோபத்தில் இருந்து வந்துள்ளார். மேலும் மற்றொரு நண்பர் சாகருடன் சேர்ந்து லிகித் கவுடாவை நவீன் கடத்தி கொலை செய்து உடலை வனப்பகுதியில் வீசியது தெரியவந்தது.

போலீஸ் வலைவீச்சு

இதுகுறித்து ஹாசன் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள நவீன் மற்றும் சாகரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story