போலி கால்சென்டர் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கு ரத்து; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


போலி கால்சென்டர் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கு ரத்து; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 Jan 2023 12:15 AM IST (Updated: 25 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

போலி கால்சென்டர் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு ஒயிட்பீல்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கால்சென்டர் ஒன்று உள்ளது. இதன் உரிமையாளர் ஜித்யா கிஷன் ஆவார். மேலும், இங்கு ரிஷி வியாஸ் என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர்கள் கால் சென்டர் நடத்துவது போல், பலரிடம் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ஒயில்பீல்டு போலீசார் கால் சென்டரில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த பணம், கார், செல்போன்கள், மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பான வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

இதற்கிடையே ரிஷி வியாஸ் உள்பட சிலர் விசாரணையை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி நடராஜன் முன்னிலையில் நடைபெற்றது. அபபோது நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தார். இதையடுத்து நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கால்சென்டர் நடத்தியதற்கு ஆதாரம் உள்ளது. ஆனால் அவர்கள் அதனை தவறாக பயன்படுத்தி பணமோசடி செய்தது உறுதி செய்யப்படவில்லை. மேலும் அவர்கள் மீது இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை. தகவலின் பேரில் போலீசார், சோதனை செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது தொடரப்பட்ட போலி கால் சென்டர் வழக்கை ரத்து செய்து

உத்தரவிட்டார்.


Next Story