சிவசேனா கட்சி பொறுப்பில் இருந்து ஏக்நாத் ஷிண்டே நீக்கம்; உத்தவ் தாக்கரே நடவடிக்கை


சிவசேனா கட்சி பொறுப்பில் இருந்து ஏக்நாத் ஷிண்டே நீக்கம்;  உத்தவ் தாக்கரே நடவடிக்கை
x

சிவசேனா கட்சி பொறுப்பில் இருந்து ஏக்நாத்ஷிண்டேவை நீக்க உத்தவ் தாக்கரே நடவடிக்கை எடுத்து உள்ளார்.

மும்பை,

சிவசேனா மூத்த மந்திரி ஏக்நாத்ஷிண்டே அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பா.ஜனதாவுடன் சேர்ந்து மாநிலத்தில் ஆட்சி அமைத்து உள்ளார். இந்த நிலையில் அவரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி உத்தவ் தாக்கரே ஒழுங்கு நடவடிக்கை எடுத்து உள்ளார்.

இதுகுறித்து உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள கடிதத்தில், " நீங்கள் கட்சிவிரோத செயலில் ஈடுபட்டுள்ளீர்கள். சிவசேனா உறுப்பினர் பொறுப்பை தாமாக விலகி உள்ளீர்கள். எனவே சிவசேனா பக்சா பிரமுக்காக எனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உங்களை கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து நீக்குகிறேன். " என கூறப்பட்டுள்ளது.

சிவசேனாவில் கட்சி சார்ந்த முக்கிய முடிவுகளை எடுக்க 11 தலைவர்கள் உள்ளனர். அந்த தலைவர் பொறுப்பில் இருந்து தான் ஏக்நாத் ஷிண்டே நீக்கப்பட்டு உள்ளார். ஏக்நாத் ஷிண்ேட மீதான நடவடிக்கை குறித்து அதிப்தி எம்.எல்.ஏ.க்கள் செய்தி தொடர்பாளர் தீபக் கேசர்கர் கூறுகையில், " இது ஏக்நாத் ஷிண்டேவிடம் பெரிய வேறுபாட்டை ஏற்படுத்த போவதில்லை. தற்போது அவர் தான் சட்டமன்ற குழு தலைவர், முதல்-மந்திரி. " என்றார்.


Next Story