'அக்னிபத்' திட்டத்தை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு


அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு
x

ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் ‘அக்னிபத்' புதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் 'அ

க்னிபத்' புதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வக்கீல் எம்.எல்.சர்மா தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

'அக்னிபத்' திட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் முறையான ஒப்புதல் பெறவில்லை. இந்த திட்டம் தொடர்பாக முறையாக அரசிதழில் வெளியிடாமல், நூற்றாண்டு கால பழமையான ராணுவ ஆள் சேர்க்கையை ஒற்றை அறிக்கையின் மூலம் அரசு முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. மேலும் இத்திட்டம் அரசமைப்பு சட்டத்துக்கு முரணாக உள்ளது.

அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை இழந்து, நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை ரத்துசெய்ய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story