வானவில் : மோட்டரோலா ஒன் பவர்


வானவில் : மோட்டரோலா ஒன் பவர்
x
தினத்தந்தி 10 Oct 2018 9:27 AM GMT (Updated: 10 Oct 2018 9:27 AM GMT)

ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் மிகவும் பிரபலமானது மோட்டரோலா. இந்த பிராண்டு ஸ்மார்ட் போன்களை தற்போது லெனோவா நிறுவனம் தயாரிக்கிறது.

 இப்போது கூகுள் நிறுவனத்துடன் இணைந்து அதன் லேட்டஸ்ட் இயங்குதளத்தில் செயல்படும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. பொது வாக மோட்டரோலா பிராண்டு ஸ்மார்ட்போன்கள் அதன் உறுதி, தரத்துக்கு பெயர்பெற்றது. ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தைக் கொண்டதாக இது உள்ளது. இதில் 6.2 அங்குல திரை உள்ளது. இது பார்ப்பதற்கு ஆப்பிள்-ஐ போன் எக்ஸ்.எஸ். மாடலைப் போன்று உள்ளது.

பேட்டரி 5,000 எம்.ஏ.ஹெச். உள்ளது. இதனால் 16 மணி நேரம் தொடர்ந்து செயல்படும். இதனால் இதன் தடிமன் சற்று கூடுதலாக (9 மி.மீ.) உள்ளது. இதன் எடை 205 கிராம். இதன் பின்பகுதி உலோகத்தால் ஆனது. பக்கவாட்டுப் பகுதிகள் உறுதியான பிளாஸ்டிக்கினால் ஆனது. இதில் இரண்டு சிம் மற்றும் எஸ்.டி. கார்ட் ஸ்லாட் பகுதிகள் உள்ளன. 15 வாட்ஸ் டர்போ சார்ஜரும் இதனுடன் அளிக்கப்படுகிறது.

இது ஆண்ட்ராய்டு ஒன் புரோகிராமில் செயல்படுவதால் குறைந்தபட்ச செயலிகள் மட்டுமே திரையில் ஒளிரும். இதில் 8.1 ஆண்ட்ராய்டு ஓரியோ பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மூன்று ஆண்டுகளில் வரும் புதுப்புது வெர்ஷன்களை அப்டேட் செய்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு செயலிக்கு 2 ஆண்டு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அதுவரையில் இதையும் அப்டேட் செய்யலாம். பின்பகுதியில் 12 மெகா பிக்ஸெல் மற்றும் 5 மெகா பிக்ஸெலில் இரண்டு கேமராக்களும், முன்புறத்தில் 12 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளன.

போனின் செயல்பாடுகளை அதிகம் விரும்புவோருக்கு இது மிகவும் உபயோகமான செல் போனாகும். இதன் விலை ரூ.15,999 ஆகும்.

Next Story