சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : அதிக வசதிகளைக் கொண்ட ஐ.ஓ.எஸ். 12 + "||" + Vanavil : IOS 12 With more features

வானவில் : அதிக வசதிகளைக் கொண்ட ஐ.ஓ.எஸ். 12

வானவில் : அதிக வசதிகளைக் கொண்ட ஐ.ஓ.எஸ். 12
ஆப்பிள் ஐ போன் உபயோகிப்பாளர்களுக்கு விரைவான செயல்பாடுகளை அளிப்பதற்காக அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இயங்கு தளம்தான் (ஓ.எஸ்.) ஐ.ஓ.எஸ். 12 பீட்டா.
இது முந்தைய ஐ.ஓ.எஸ் .11 செயல்பாட்டை விட பல மடங்கு விரைவானது. உங்களிடம் ஐ-போன் 5 எஸ் இருந்தால் அதில் ஐ.ஓ.எஸ். 11 இயங்குதளம் இருக்கும். விரைவான செயல்பாடுகளை விரும்பும் நீங்கள் அதற்காக செல்போனை மாற்றத் தேவையில்லை. ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஐ.ஓ.எஸ். 12 பீட்டா இயங்குதளத்தை பதிவிறக்கம் செய்துகொண்டால் போதுமானது.


செயலிகள் (ஆப்) பதிவிறக்கம் விரைவாக நடைபெறுகிறது. அதே போல அந்த செயலிகளை அணுகுவதும் நொடிப்பொழுதில் சாத்தியமாகிறது. எத்தனை செயலிகளிலிருந்தும் அறிவிப்புகள் வந்தாலும் அதை ஓரிடத்தில் தள்ளி வைக்கும் வசதி இதில் உள்ளது. அதேபோல அறிவிப்புகள் வருவதை நிறுத்தும் வசதியும் உண்டு. மற்றும் உங்களது திரையில் ஒளிர்வதைத் தவிர்க்கவும் முடியும். இதில் தகவலை பதிவு செய்தால் போதும் (Deliver Quietly) என்ற வாசகத்தை தேர்வு செய்துவிட்டால் சத்தமில்லாமல் உங்கள் மொபைலில் தகவல்கள் வந்து விழும்.

செல்போனுக்கு அடிமையாகிவிட்டதைப் போன்ற உணர்வு ஏற்பட்டு அதிலிருந்து விடுபட நீங்கள் நினைத்தால் அதற்கும் இப்போது வந்துள்ள இயங்குதளம் வழி செய்துள்ளது. எவ்வளவு நேரம் ஒரு செயலி உங்கள் திரையில் தோன்றலாம் என்பதை வரையறுத்துவிட்டால் அதற்குப் பிறகு அது உங்கள் திரையில் தோன்றாது.

இதில் அனைத்து செயல்பாடுகளுக்கும் குறுக்கு வழிகள் (Short cuts) உள்ளன. ‘பண விவரத்தை காட்டு’ (Show me the money) என தேர்வு செய்தால் உங்களது வங்கிக் கணக்கிற்கு இது செல்லும். 7 வகையான செயல்பாடுகளை இத்தகைய குறுக்கு வழிகள் மூலம் எளிதாக செய்ய முடியும்.

அதேபோல வங்கி பரிவர்த்தனைகளுக்கு உங்களது செல்போனுக்கு ஓ.டி.பி. எனப்படும் ஒரு முறை பதிவு செய்யவேண்டிய பாஸ்வேர்ட் வரும். அதை நீங்கள் பார்த்து டைப் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அவ்விதம் வரும் ஓ.டி.பி-ஐ அப்படியே பதிவு செய்து அதற்குரிய இடத்தில் பேஸ்ட் செய்து விடும். எஸ்.எம்.எஸ். ஓ.டி.பி. ஆட்டோ பில் வசதியும் இதில் உள்ளது.

உங்கள் குடும்பத்தினர் அனைவருமே மொபைலை பயன்படுத்துவதாக இருந்தால் அனைவரது முகத்தையும் பதிவு செய்யலாம். பேஸ் அன்லாக் வசதிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முகங்களை பதிவு செய்யும் வசதியும் இதில் உள்ளது. க்யூஆர் கோட் பதிவு, ஆட்டோமேடிக் சாப்ட்வேர் அப்டேட்ஸ் ஆகியன இதில் சேர்க்கப்பட்ட புதிய சிறப்பு அம்சங்களாகும்.

முப்பரிணாம பொருள் (3டி) அறிதல் என்பது இதில் சேர்க்கப்பட்ட கூடுதல் அம்சமாகும். இதில் உள்ள மெஷர் ஆப் (Measure app) மூலம் இரு முனைகளுக்கிடையிலான தூரத்தை அளக்க உதவுகிறது. அதேபோல வாய்ஸ் மெமோஸ் ஆப் (Voice memo app) பதிவு செய்வதை எளிதாக்கியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு செய்தியும் எந்த பைலில் உள்ளது என்பதை குரல் மூலம் கண்டறிய முடியும். போட்டோ ஆப், கார் பிளே உள்ளிட்ட செயலிகளின் செயல்பாடும் விரை வாக உள்ளது.

செல்போன் பிரியர்களை அதிகம் கட்டிப்போடும் அனிமோஜி, மெமோஜி உள்ளிட்ட உருவ பொம்மைகள் இம்முறை நான்கு புதிய கதாபாத்திரங்களாக டி.ரெக்ஸ், கோயோலா, கோஸ்ட், டைகர் என வந்துள்ளன. இதன் மூலம் புதிய அனிமேடட் கதாபாத்திரங்களை கண்டு மகிழலாம்.

பிரைவசி எனப்படும் தனிப்பட்ட தகவல் பதிவுகளை பாதுகாக்கும் வசதிக்கு இதில் கூடுதல் கவனம் தரப்பட்டுள்ளது. இதற்கென சில சங்கேத குறியீடுகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் இணையதளங்களில் விளம்பரம் வெளியிடுவோர், உங்கள் மொபைல் போனில் இணையதளத்தில் விளம்பரங்களை வெளியிட முடியாது. அந்த வகையில் இதில் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எந்த இணையதளமும் உங்கள் அனுமதியின்றி உங்களைத் தொடர முடியாத வகையில் பாதுகாப்பு வளையம் இதில் உள்ளது. மேலும் வலுவான சங்கேத குறியீடுகளை (பாஸ்வேர்ட்) அடிக்கடி பரிந்துரைக்கும். இதனால் உங்கள் ஸ்மார்ட்போனை யாராலும் ஹாக் செய்ய முடியாது. பேட்டரி பயன்பாடு எந்தெந்த நாளில் அதிகமாக உள்ளது என்பதையும் இதில் அறிந்து கொள்ளும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

பொதுவாக முந்தைய இயங்குதளத்தை விட அடுத்த வெர்ஷன் சிறப்பானதாக இருக்கும். முந்தைய தவறுகள், பிரச்சினைகள் அடுத்த வெர்ஷனில் சரி செய்யப்படும். ஆனால் ஐ.ஓ.எஸ். 12 இயங்கு தளம் மிகச் சிறந்த செயல்பாடுகளைக் கொண்டதாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : 3 கேமராவுடன் ‘கேமோன் ஐ4’
ஸ்மார்ட்போன்களில் இப்போது மிகவும் பிரபலமாகிவரும் பிராண்ட்களில் கேமோன் பிராண்டும் ஒன்றாகும்.
2. வானவில் : குளிர்ந்த காற்றை தரும் ‘ஏர் வேர்ல்’
சுட்டெரிக்கும் வெயிலில் ஏ.சி. இருக்கும் இடத்தை தேடி நம் கால்கள் தானாக நடக்கும். அதே நேரம் குளிர் காலங்களில் கதகதப்பான இடங்களை நோக்கி செல்வோம்.
3. வானவில் : மோட்டார் சூட்கேஸ்
சில தொழில்நுட்பங்கள் உடல் உழைப்பை விரும்பாதவர்களுக்காகவே உருவாக்கப்படுகின்றன.அந்த வகையை சேர்ந்தது தான் இந்த மோடோ பேக்.
4. வானவில் : சோனியின் சிறிய ரக கேமரா
மின்னணு பொருள்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பானின் சோனி நிறுவனம் சிறிய ரக கேமராவை அறிமுகம் செய்துள்ளது.
5. வானவில் : சாம்சங்கின் 6 சீரிஸ்
மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் தனது பிரபல 6 சீரிஸ் வரிசையில் ஸ்மார்ட் டி.வி.க்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.