வானவில் : கடின நீரை மென்னீராக்கும் கருவி


வானவில் : கடின நீரை மென்னீராக்கும் கருவி
x
தினத்தந்தி 10 Oct 2018 9:55 AM GMT (Updated: 10 Oct 2018 9:55 AM GMT)

நகர்ப்புறங்களில் பெரும்பாலும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்பவை ஆழ்குழாய் கிணறுகள்தான். இதில் கிடைக்கும் தண்ணீர் பெரும்பாலும் கடினத் தன்மை கொண்டவைதான்.

அதாவது இவற்றை உபயோகிக்கும் போது குழாயில் கறை படியும். பாத்ரூம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டைல்ஸில் கடினமான கறை உருவாகும். சிங்க், கெய்சர் உள்ளிட்டவற்றை கவனித்தாலே அவற்றில் கறை படிந்திருப்பது தெரியும்.

பக்கெட்டுகள் கடினமான வையாக மாறி வருவதையும் பார்க்கலாம். இதற்குக் காரணம் ஆழ்குழாய் கிணற்றிலிருந்து வரும் தண்ணீரில் அதிக அளவு மக்னீசியம், கால்சியம் இருப்பதே ஆகும். இவைதான் குழாய், கெய்சர் இவற்றில் படிந்து அவற்றை கடினமாக்குகிறது.

இந்த குறைபாட்டை போக்கும் வகையில் வந்துள்ளதுதான் டி’ கால் வாட்டர் சாப்ட்னர் (D’Cal Hard Water Softener) . இதை உபயோகிப்பது மிகவும் எளிது. 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இந்த சுத்திகரிப்பானை போட்டவுடன் அது தண்ணீரில் சேர்ந்துள்ள கால்சியம், மக்னீசியம் உள்ளிட்ட தாதுக்களை நீக்கி சுத்தமான தண்ணீர் கிடைக்க வழி செய்யும்.

வழக்கமாக இந்த கருவி இல்லாத தண்ணீரை பிடித்து காய்ச்சினால் பாத்திரத்தின் அடியில் வெள்ளையாக ஒரு படிவம் படியும். இது கால்சியம் ஆகும். இந்த டி’ கால் கருவியைப் பயன்படுத்தினால் அத்தகைய வெண்மை படலம் உருவாகாது.

தொட்டியில் இதை தொங்கவிட்டாலோ அல்லது அதனுள் போட்டாலே போதும். இது தொடர்ந்து சுத்திகரிக்கும். லட்சக்கணக்கில் செலவழித்து கனவு இல்லத்தை கட்டுவோர் அல்லது வாங்குவோர் கடின நீரை மென்னீராக்கும் இந்தக் கருவியை வாங்குவது சிறந்தது என்றே தோன்றுகிறது. அறிமுகத்தின்போது இதன் விலை ரூ.3,600 இப்போது அமேசான் இணையதளத்தில் தள்ளுபடி விலையில் ரூ. 2,700-க் குக் கிடைக்கிறது.

Next Story