வானவில் : விபத்து சோதனையில், மாருதி விடாரா பிரீஸாவுக்கு 4 ஸ்டார்


வானவில் : விபத்து சோதனையில், மாருதி விடாரா பிரீஸாவுக்கு 4 ஸ்டார்
x
தினத்தந்தி 10 Oct 2018 10:35 AM GMT (Updated: 10 Oct 2018 10:35 AM GMT)

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்.யு.வி. கார்களில் முதலில் இருப்பது மாருதி சுஸுகி விடாரா பிரீஸா மாடல்தான். இந்த கார், சர்வதேச நிறுவனம் நடத்திய விபத்து சோதனையில் (கிராஷ் டெஸ்ட்) நான்கு ஸ்டார்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

புதிய கார் மதிப்பீடு திட்டத்தின்கீழ் (என்.சி.ஏ.பி.) சந்தைக்கு வரும் அனைத்து வகையான கார்களும் சோதிக்கப்படும். திடீரென விபத்து ஏற்பட்டால் வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு எந்த அளவிற்கு காயம் ஏற்படும், குழந்தைகள் பாதுகாப்பிற்கு எந்த வகையில் வாகனத்தில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இதில் பரிசோதிக்கப்படும். முன்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதி மற்றும் பின்புறம் தவிர மேல் பகுதி ஆகிய அனைத்து பகுதிகளும் சோதிக்கப்படும்.

கார் குறிப்பிட்ட வேகத்தில் வந்து மோதினால் கார் டிரைவருக்கு எந்தெந்த பகுதிகளில் அடிபடும் என்பது உள்ளிட்ட விஷயங்கள் இதில் ஆராயப்படும். மனிதர்களுக்கு பதிலாக மனித உருவிலான பொம்மைகள் பயன்படுத்தப்படும். இந்த பொம்மைகள் எந்த அளவிற்கு சேதம் அடைந்துள்ளன என்கிற அடிப்படையில் வாகனத்தின் பாதுகாப்புத் தன்மை மதிப்பிடப்படும். மோதும் போது எவ்வளவு நேரத்தில் ஏர் பேக் விரிந்து பயணிகளை காக்கிறது என்பது உள்ளிட்ட விஷயங்களும் இதில் ஆராயப்படும்.

மாருதி விடாரா பிரீஸாவில் இரட்டை ஏர்பேக்குகள் உள்ளன. இது தவிர ஐஸோபிக்ஸ் ஆங்கரேஜஸ் இதில் கூடுதல் வசதியாக சேர்க்கப்பட்டுள்ளன. சோதனையில் முன் இருக்கையில் பயணிப்போர் (டிரைவர் தவிர்த்து) பின்னிருக்கையில் உள்ளவர்களுக்கு எந்தவகையில் பாதிப்பு ஏற்படுகிறது என்பது மதிப்பிடப்படும். அதன்படி டிரைவர் மற்றும் பயணிகளின் தலைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று என்.சி.ஏ.பி. சான்றளித்துள்ளது. இந்த காரின் ஷெல் எனப்படும் கூடு மிகவும் உறுதியாகவும், வலி மையாகவும் உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் இந்த காருக்கு 2 ஸ்டார்கள் கிடைத்துள்ளன. 18 மாத குழந்தை பொம்மை வைத்து சோதிக்கப்பட்டது. அது தவிர 3 வயது குழந்தை பொம்மை சோதிக்கப்பட்டது. இதில் 3 வயது குழந்தை பொம்மைக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் இதில் உள்ள ஐசோபிக்ஸ் ஆங்கரேஜஸ் சர்வதேச தரத்திற்கு இணையாக இல்லை என்று என்.சி.ஏ.பி. தெரிவித்துள்ளது.

Next Story