சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : சுஸுகி இன்ட்ரூடர் எஸ்.பி. அறிமுகம் + "||" + Vanavil : Suzuki intrutar SB Introduction

வானவில் : சுஸுகி இன்ட்ரூடர் எஸ்.பி. அறிமுகம்

வானவில் : சுஸுகி இன்ட்ரூடர் எஸ்.பி. அறிமுகம்
மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சுஸுகி நிறுவனம் இன்ட்ரூடர் எஸ்.பி. என்ற பெயரில் புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 1,07,300 ஆகும்.
இந்த மோட்டார் சைக்கிளில் கார்புரேட்டர் (ஆர்.எஸ். 505) மற்றும் பியூயல்இன்ஜெக்‌ஷன் (ஆர்.எஸ். 404) மாடலும் வந்துள்ளன.

இரண்டு என்ஜினிலும் பெருமளவில் மாற்றம் இருக்காது. இருப்பினும் தோற்றப் பொலிவில் மெட்டாலிக் கருப்பு நிறம் சிறப்பாக காட்சியளிக்கிறது.


சாகசப் பிரியர்களுக்காக தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாகவே இந்த மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்தது மகிழ்ச்சியளிப்பதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சடோஷி உசிதா தெரிவித்துள்ளார். சாலையில் இதில் செல்லும்போது குறைந்தபட்சம் ஒரு முறையாவது திரும்பிப் பார்க்க வைக்கும் வடிவமைப்பு, சொகுசு பைக் போன்ற தோற்றம், ஸ்போர்ட்ஸ் பைக் போன்ற அழகிய அம்சங்கள் அனைத்துமே தங்களை தனித்து காட்டிக் கொள்ள பிரியப்படுவோரின் தேர்வாக இருக்கும் என்று உசிதா குறிப்பிடுகிறார்.

இது 155 சி.சி. திறன் கொண்டது. ஒற்றை சிலிண்டருடன் இது வெளிவந்துள்ளது. இதில் 5 கியர்கள் உள்ளன. 14.6 ஹெச்.பி. திறன் 14 நியூட்டன் மீட்டர் டார்க் அளவு கொண்டது. இது நான்கு ஸ்டிரோக் என்ஜின். இதன் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 11 லிட்டராகும். ஒருலிட்டர் பெட்ரோலுக்கு சோதனை ஓட்டத்தில் 44 கி.மீ. தூரம் ஓடியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் டிஜிட்டல் ஸ்பீடா மீட்டர் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : 3 கேமராவுடன் ‘கேமோன் ஐ4’
ஸ்மார்ட்போன்களில் இப்போது மிகவும் பிரபலமாகிவரும் பிராண்ட்களில் கேமோன் பிராண்டும் ஒன்றாகும்.
2. வானவில் : குளிர்ந்த காற்றை தரும் ‘ஏர் வேர்ல்’
சுட்டெரிக்கும் வெயிலில் ஏ.சி. இருக்கும் இடத்தை தேடி நம் கால்கள் தானாக நடக்கும். அதே நேரம் குளிர் காலங்களில் கதகதப்பான இடங்களை நோக்கி செல்வோம்.
3. வானவில் : மோட்டார் சூட்கேஸ்
சில தொழில்நுட்பங்கள் உடல் உழைப்பை விரும்பாதவர்களுக்காகவே உருவாக்கப்படுகின்றன.அந்த வகையை சேர்ந்தது தான் இந்த மோடோ பேக்.
4. வானவில் : சோனியின் சிறிய ரக கேமரா
மின்னணு பொருள்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பானின் சோனி நிறுவனம் சிறிய ரக கேமராவை அறிமுகம் செய்துள்ளது.
5. வானவில் : சாம்சங்கின் 6 சீரிஸ்
மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் தனது பிரபல 6 சீரிஸ் வரிசையில் ஸ்மார்ட் டி.வி.க்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.