வானவில் : நோரியா காம்பாக்ட் ஏர் கண்டிஷனர்


வானவில் : நோரியா காம்பாக்ட் ஏர் கண்டிஷனர்
x
தினத்தந்தி 24 Oct 2018 11:33 AM GMT (Updated: 24 Oct 2018 11:33 AM GMT)

பொதுவாக ஏர் கண்டிஷனர் வாங்குவது என்ற உடனேயே அதை எங்கே பொறுத்துவது என்ற பிரச்சினை எழும்.

ஏனெனில் அது ஓரளவு இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும். சரி இடம் பார்த்தாயிற்று, பிராண்டும் தேர்ந்தெடுத்தாயிற்று என்றால் அதை பொறுத்துவதற்கு டெக்னீஷியன்கள் வர வேண்டும். 

கோடைக் காலமாயின், நீங்கள் ஏ.சி. வாங்கியிருந்தாலும், மெக்கானிக் கிடைக்கவில்லையெனில் கோடையின் கடுமையை சில நாள்கள் கூடுதலாக அனுபவிக்க வேண்டியிருக்கும். 

இதற்கெல்லாம் தீர்வாக நோரியா நிறுவனம் போர்ட்டபிள் ஏர் கண்டிஷனரை அறிமுகம் செய்துள்ளது. இதை நிர்மாணிப்பது மிகவும் எளிது. இது அதிக இடத்தையும் அடைத்துக் கொள்ளாது. 3 பேஸ் மின் இணைப்பு சாக்கெட் இருந்தால் போதும். போன் சார்ஜ் போடுவதைப் போல பிளக்கில் சொருகி செயல்படுத்தலாம். ஒற்றை படுக்கையறைக்குப் போதுமான குளிர்ச்சியை இது அளிக்கும். இதன் விலை 499 டாலராகும். ஓராண்டு உத்தரவாதமும் இதற்கு அளிக்கிறது நோரியா. 

அமேசான் இணையதளம் இந்த மாடலை விருப்பத்தின் பேரில் இறக்குமதி செய்து தருகிறது. இறக்குமதி வரி கூடுதலாக செலுத்த வேண்டும். 

Next Story