சிறப்புக் கட்டுரைகள்

ஜனவரி வரையிலான 10 மாதங்களில் அனல்மின் நிலையங்களின் நிலக்கரி இறக்குமதி 4.6% அதிகரித்தது + "||" + Coal imports of thermal plants rose by 4.6% in the 10 months to January

ஜனவரி வரையிலான 10 மாதங்களில் அனல்மின் நிலையங்களின் நிலக்கரி இறக்குமதி 4.6% அதிகரித்தது

ஜனவரி வரையிலான 10 மாதங்களில் அனல்மின் நிலையங்களின் நிலக்கரி இறக்குமதி 4.6% அதிகரித்தது
நடப்பு நிதி ஆண்டில் (2018-19), ஜனவரி வரையிலான 10 மாதங்களில் அனல்மின் நிலையங்களின் நிலக்கரி இறக்குமதி 4.6 சதவீதம் அதிகரித்து 4.80 கோடி டன்னாக இருக்கிறது.
பிரதான எரிபொருள்

அனல்மின் நிலையங்களில் நிலக்கரிதான் பிரதான எரிபொருளாக இருந்து வருகிறது. உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி அதிகமாக இருந்தாலும் தேவையை ஈடு செய்யும் வகையில் உற்பத்தி இல்லாததால் அதிக அளவு நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் (2018 ஏப்ரல்-2019 ஜனவரி) அனல்மின் நிலையங்கள் மொத்தம் 4.80 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்து இருக்கின்றன. இது கடந்த நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 4.6 சதவீதம் உயர்வாகும்.

இதே காலத்தில் மாநில அனல்மின் உற்பத்தி நிலையங்களின் நிலக்கரி இறக்குமதி 2.6 மடங்கு அதிகரித்துள்ளது. தனியார் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களின் நிலக்கரி இறக்குமதி 2.5 சதவீதம் குறைந்து இருக்கிறது.

கணக்கீட்டுக் காலத்தில் இறக்குமதி நிலக்கரியை மட்டும் பயன்படுத்தும் மின் நிலையங்கள் 3.16 கோடி டன் இறக்குமதி செய்துள்ளன. இது கடந்த நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 3.5 சதவீதம் குறைவாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிலக்கரியை பயன்படுத்தும் தனியார் நிறுவனங்களின் இறக்குமதி 1.3 சதவீதம் குறைந்து (1.11 கோடி டன்னில் இருந்து) 1.10 கோடி டன்னாக குறைந்துள்ளது.

நம் நாட்டில், கடந்த 2018-ஆம் ஆண்டில் 17.18 கோடி டன் நிலக்கரி இறக்குமதி ஆகி உள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 19 சதவீதம் அதிகமாகும். இதில், கோக்கிங் கோல் எனப்படும் உயர்தர நிலக்கரி இறக்குமதி 14 சதவீதம் அதிகரித்து (4.59 கோடி டன்னில் இருந்து) 5.23 கோடி டன்னாக உயர்ந்து இருக்கிறது.

கோல் இந்தியா

சர்வதேச அளவில் நிலக்கரி உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே சமயம் உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஏப்ரல்-பிப்ரவரி) கோல் இந்தியா நிறுவனம் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மொத்தம் 44 கோடி டன் நிலக்கரி சப்ளை செய்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 7.1 சதவீதம் அதிகமாகும்.

தொடர்புடைய செய்திகள்

2. மே மாதத்தில் நிலக்கரி இறக்குமதி 15% அதிகரிப்பு
மே மாதத்தில் நிலக்கரி இறக்குமதி 15 சதவீதம் அதிகரித்து 2.40 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.