ஜனவரி-மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவு


ஜனவரி-மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவு
x
தினத்தந்தி 14 May 2019 3:49 AM GMT (Updated: 14 May 2019 3:49 AM GMT)

முன்னணி நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சி

இந்திய நிறுவனங்கள் தமது ஜனவரி-மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. முன்னணி நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சிப் புள்ளிவிவரங்கள் வருமாறு:-

ஸ்டிரைட்ஸ் பார்மா

ஸ்டிரைட்ஸ் பார்மா சயின்ஸ் நிறுவனம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.44 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இந்நிறுவனத்திற்கு ரூ.3 கோடி இழப்பு ஏற்பட்டு இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் (ரூ.670 கோடியில் இருந்து) ரூ.840 கோடியாக உயர்ந்துள்ளது.

சென்ற நிதி ஆண்டில் (2018-19) இந்நிறுவனத்தின் நிகர லாபம் (ரூ.74 கோடியில் இருந்து) ரூ.59 கோடியாக குறைந்து இருக்கிறது. இதே காலத்தில் அதன் மொத்த வருவாய் (ரூ.2,845 கோடியில் இருந்து) ரூ.3,012 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.3 இறுதி டிவிடெண்டு வழங்க பரிந்துரை செய்துள்ளது.

டால்மியா பாரத்

டால்மியா பாரத் நிறுவனம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.264 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.124 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 2 மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 8 சதவீதம் வளர்ச்சி கண்டு (ரூ.2,695 கோடியில் இருந்து) ரூ.2,905 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த நிதி ஆண்டில் (2018-19) இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.349 கோடியாக உயர்ந்து இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் அது ரூ.291 கோடியாக இருந்தது. இதே காலத்தில் அதன் மொத்த வருவாய் (ரூ.9,101 கோடியில் இருந்து) ரூ.9,728 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

வாக்ராங்கி

வாக்ராங்கி நிறுவனம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.6.5 கோடியை நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 91 சதவீதம் குறைவாகும். அப்போது அது ரூ.76 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் 94 சதவீதம் சரிவடைந்து (ரூ.1,847 கோடியில் இருந்து) ரூ.101 கோடியாக குறைந்துள்ளது.

மெர்க்

மெர்க் நிறுவனம், ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.41 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.23 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 79 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 22 சதவீதம் அதிகரித்து (ரூ.204 கோடியில் இருந்து) ரூ.249 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நிதி ஆண்டிற்கு, பங்கு ஒன்றுக்கு ரூ.440 டிவிடெண்டு அறிவித்துள்ளது. இதில் ஒரு நேர சிறப்பு டிவிடெண்டு ரூ.416-ம் அடங்கும்.

ஐநாக்ஸ் லெய்ஷர்

ஐநாக்ஸ் லெய்ஷர் நிறுவனம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.48 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.58 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 17 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 47 சதவீதம் உயர்ந்து (ரூ.330 கோடியில் இருந்து) ரூ.484 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் இந்நிறுவனம் ரூ.1,707 கோடி வருவாயில் ரூ.133 கோடி நிகர லாபம் ஈட்டி இருக்கிறது. முந்தைய ஆண்டில் அதன் வருவாய் மற்றும் லாபம் முறையே ரூ.1,363 கோடி மற்றும் ரூ.115 கோடியாக இருந்தது.

பாலி மெடிகியூர்

பாலி மெடிகியூர் நிறுவனம், ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.21 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டி உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.23 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 7 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் தனிப்பட்ட மொத்த வருவாய் (ரூ.145 கோடியில் இருந்து) ரூ.164 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதி ஆண்டிற்கு, ரூ.5 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.2 டிவிடெண்டு வழங்க பரிந்துரை செய்துள்ளது.


Next Story