சென்னையில் போன்சாய் பூங்கா


சென்னையில் போன்சாய் பூங்கா
x
தினத்தந்தி 17 May 2019 6:41 AM GMT (Updated: 17 May 2019 6:41 AM GMT)

செம்மொழிப் பூங்கா பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள செம்மொழிப் பூங்கா பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழக தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான இந்த பூங்கா, 150 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டுவிட்டது. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டபின்பு, இது செம்மொழி பூங்கா என்ற பெயருடன் செயல்படுகிறது.

ஊட்டி தாவரவியல் பூங்காவைப்போல இங்கும் பல சிறப்பம்சங்கள் உள்ளன. போன்சாய் முறையில் குட்டையாக உயரம் சுருக்கி வளர்க்கப்பட்ட ஆலமரம், அரச மரம், மா, மாதுளை, கொய்யா, சப்போட்டா, நெல்லி, புளி, எலுமிச்சை போன்ற மரங்களை கொண்ட போன்சாய் தோட்டம் இங்குள்ளதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

மஞ்சள் மலர்களையும், மஞ்சள் செடிகளையும் உள்ளடக்கிய தாவரங்களை தனியே பராமரிக்கும் மஞ்சள் பூங்காவும் உள்ளது. விதவிதமான மூங்கில் மரங்கள் நிரம்பிய மூங்கில் பூங்கா, பலவிதமான பட்டாம் பூச்சிகள் ஓடியாடும் பட்டாம்பூச்சிப் பூங்கா என 10 விதமான சிறுபூங்காக்கள் செம்மொழிப் பூங்காவில் இடம்பெற்றுள்ளன. பெருநகருக்குள் அமைந்த பெரிய தாவரவியல் தோட்டமாக இது கருதப்படுகிறது.


Next Story