30 ஆயிரம் ஆண்டுகள் ‘உயிருடன்’ இருக்கும் விதைகள்


30 ஆயிரம் ஆண்டுகள் ‘உயிருடன்’ இருக்கும் விதைகள்
x
தினத்தந்தி 25 May 2019 10:14 AM GMT (Updated: 25 May 2019 10:14 AM GMT)

தாவர விதைகள் அதிகபட்சம் எவ்வளவு ஆண்டுகாலம் ‘உயிர்ப்புடன்’ இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

அழிந்து போய்விட்ட தாவர இனத்தை ரஷிய ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் உருவாக்கியுள்ளனர். அணில்கள் 32 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைத்த விதைகளைக் கொண்டு இந்தத் தாவர இனத்தை அவர்கள் உருவாக்கினர்.

குளிரான பருவநிலையில் வளரும் சைலீன் ஸ்டெனோபைலா என்ற தாவரம் பனி யுகத்தில் இருந்ததாகக் கருதப்படுகிறது. சைபீரியாவில் உறைந்துபோன நதிக் கரையில் புதைந்து போயிருந்த விதைகளைக் கொண்டு இந்தத் தாவர இனத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கினர்.

அந்த விதைகளில் இருந்து திசுக்களை எடுத்து, புதிய தாவரங்களை வளரச் செய்தனர். பிறகு அவை தாமாகவே பெருகிவிட்டன.

பனிப் பிரதேசங்களில் மிஞ்சியுள்ள பொருட்களில் இருந்து, அழிந்து போய்விட்ட தாவர இனங்களை உருவாக்குவதில் இது முதலாவது முயற்சியாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிரோடு இருக்கும் அதிசய விதைகள்!


Next Story