சென்ற வார இறுதியில் டாப் 10 நிறுவனங்களின் பங்கு விலை நிலவரம்


சென்ற வார இறுதியில் டாப் 10 நிறுவனங்களின் பங்கு விலை நிலவரம்
x
தினத்தந்தி 27 May 2019 7:52 AM GMT (Updated: 27 May 2019 7:52 AM GMT)

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

சென்ற வார இறுதியில், பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் டாப் 10 பட்டியலில் உள்ள நிறுவனங்களின் பங்கு விலை நிலவரம் வருமாறு:-

* ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கு விலை 0.07 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.1,336.80-ஆக இருக்கிறது.

* டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனப் பங்கின் விலை 0.20 சதவீதம் குறைந்து ரூ.2,049.65-ல் நிலைகொண்டது.

* எச்.டீ.எப்.சி. வங்கிப் பங்கு விலை 1.63 சதவீதம் முன்னேறி ரூ.2,372.30-ஆக இருந்தது.

* இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனப் பங்கின் 0.10 சதவீதம் குறைந்து ரூ.1,749.20-க்கு விலைபோனது.

* எச்.டீ.எப்.சி. நிறுவனப் பங்கு விலை 0.56 சதவீதம் உயர்ந்து ரூ.2,127.50-ல் நிலைபெற்றது.

* ஐ.டி.சி. நிறுவனப் பங்கின் விலை 0.57 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.290.15-ஆக இருந்தது.

* பாரத ஸ்டேட் வங்கி பங்கு விலை 3.59 சதவீதம் உயர்ந்து ரூ.354.60-க்கு கைமாறியது.

* இன்போசிஸ் நிறுவனப் பங்கின் விலை 1.17 சதவீதம் அதிகரித்து ரூ.709.45-ஆக இருந்தது.

* கோட்டக் மகிந்திரா வங்கிப் பங்கு 0.88 சதவீதம் உயர்ந்து ரூ.1,513.85-க்கு விலைபோனது.

* ஐசிஐசிஐ வங்கிப் பங்கின் விலை 5.09 சதவீதம் அதிகரித்து ரூ.431.50-க்கு கைமாறியது.  

Next Story