சிறப்புக் கட்டுரைகள்

புதன்கிழமை பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 174 புள்ளிகள் இழப்பு : நிப்டி 57 புள்ளிகள் இறங்கியது + "||" + The Sensex lost 174 points in early trading on Wednesday

புதன்கிழமை பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 174 புள்ளிகள் இழப்பு : நிப்டி 57 புள்ளிகள் இறங்கியது

புதன்கிழமை பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 174 புள்ளிகள் இழப்பு : நிப்டி 57 புள்ளிகள் இறங்கியது
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை

புதன்கிழமை அன்று பங்கு வர்த்தகம் பின்னடைவை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 174 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 57 புள்ளிகள் இறங்கியது.

ரூபாய் மதிப்பு

அன்னிய செலாவணி சந்தையில் ஒரு கட்டத்தில் ரூபாய் மதிப்பு 6 காசுகள் குறைந்தது. மேலும் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 1.79 சதவீதம் உயர்ந்தது. இதனால் பங்கு வர்த்தகம் பாதிப்புக்கு உள்ளானது. ஐரோப்பிய பங்கு மார்க்கெட்டுகள் சரிவுடன் தொடங்கியது, மோட்டார் வாகனங்கள் விற்பனை சரிவு போன்றவையும் தாக்கம் ஏற்படுத்தின.

அந்த நிலையில், மும்பை சந்தையில் பல்வேறு துறைகளுக்கான குறியீட்டு எண்களும் இறங்கின. அதில் நுகர்வோர் சாதனங்கள் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 1.65 சதவீதம் இறங்கியது. அடுத்து தொழில்துறை குறியீட்டு எண் 1.51 சதவீதம் குறைந்தது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 9 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. 21 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தது. இந்தப் பட்டியலில் யெஸ் பேங்க், சன் பார்மா, கோட்டக் மகிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட 9 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. அதே சமயம் பஜாஜ் பைனான்ஸ், டாட்டா ஸ்டீல், டாட்டா மோட்டார்ஸ், ஆக்சிஸ் பேங்க், லார்சன் அண்டு டூப்ரோ, மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட 21 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 173.78 புள்ளிகள் சரிந்து 38,557.04 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 38,854.85 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 38,474.66 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 946 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,496 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 142 பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,078 கோடியாக குறைந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அது ரூ.2,370 கோடியாக இருந்தது.

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 57 புள்ளிகள் குறைந்து 11,498.90 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 11,593.70 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 11,475.65 புள்ளிகளுக்கும் சென்றது.