பங்குச்சந்தை துளிகள்


பங்குச்சந்தை துளிகள்
x
தினத்தந்தி 11 July 2019 10:57 AM GMT (Updated: 11 July 2019 10:57 AM GMT)

* பியம் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளில் முதலீடு செய்யலாம் என கோட்டக் செக்யூரிட்டீஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்நிறுவனம் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.655-ஆக நிர்ணயித்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் புதன்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை ரூ.449.50-ல் நிலைகொண்டது. முந்தைய நாள் இறுதி நிலவரத்தை காட்டிலும் இது 0.95 சதவீதம் உயர்வாகும்.

* ஜிந்தால் ஸ்டீல் அண்டு பவர் பங்குகளை வாங்கலாம் என சிட்டி குரூப் குளோபல் மார்க்கெட்ஸ் தெ ாடர்ந்து பரிந்துரை செய்கிறது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.250-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை ரூ.131.80-ஆக இருந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 2.98 சதவீத சரிவாகும்.

* டெக் மகிந்திரா பங்குகளில் முதலீடு செய்யலாம் என எச்.எஸ்.பீ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் (ரூ.840-ல் இருந்து) ரூ.800-ஆக குறைத்து இருக்கிறது. மும்பை சந்தையில் புதன்கிழமை அன்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை ரூ.674.60-ல் நிலைபெற்றது. முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 0.13 சதவீத சரிவா கும்.

* பஜாஜ் ஆட்டோ பங்குகளில் முதலீட்டை படிப்படியாக குறைத்துக் கொள்ளலாம் என கோட்டக் இண்ஸ்டிடியூஷனல் ஈக்விக்டீஸ் கூறுகிறது. இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.2,700-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில் நேற்று இப்பங்கின் விலை ரூ.2,741.90-ல் நிலை பெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 1.54 சதவீத சரிவாகும்.

* டாட்டா மோட்டார்ஸ் பங்குகளை விற்று விடலாம் என சி.எல்.எஸ்.ஏ. நிறுவனம் தெரிவித்து இரு க்கிறது. இந்நிறுவனம் பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.1506-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை சந்தையில் புதன்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை ரூ.151.40-ஆக இருந்தது. முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 2.79 சதவீதம் குறைவாகும்.

* குவெஸ் கார்ப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என ஐ.ஐ.எப்.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.830-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை ரூ.151.40-ல் நிலைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 0.19 சதவீதம் ஏற்றமாகும்.

நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு அடிப்படையில் கொ டுக்கப்படுகிறது. எனவே, பங்குகளில் முதலீடு செய்வோர் அந்த நேரத்தில் சந்தை நிலவரம் எவ்வாறு உள் ளது என்பதை ஆராய்ந்து தமது சொந்த முடிவுகளின் பேரில் அல்லது தமது முதலீட்டு ஆலோசகரின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்.

Next Story