தினம் ஒரு தகவல் : நீரில் ஊறவைத்த பழங்கள்


தினம் ஒரு தகவல் : நீரில் ஊறவைத்த பழங்கள்
x
தினத்தந்தி 17 July 2019 6:59 AM GMT (Updated: 17 July 2019 6:59 AM GMT)

உணவின் தன்மையை பொருத்து தான் நாம் அவற்றை வகைப்படுத்த வேண்டும். சில உணவுகள் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

ணவின் தன்மையை பொருத்து தான் நாம் அவற்றை வகைப்படுத்த வேண்டும். சில உணவுகள் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். சில உணவுகள் நமது முழு உடல் அமைப்பையும் மாற்றம் பெறச் செய்யும். பெரும்பாலும் இந்த வகையை சேர்ந்தது தான் பழங்களும்.

நமக்கு பிடித்த பழங்களை எந்நேரமும் சாப்பிட்டு கொண்டே இருப்போம். பழங்களினால் கிடைக்கும் ஆரோக்கிய நலன்கள் ஏராளம். காய்கறிகளில் இருக்கும் சத்துக்கள் தான் பழங்களிலும் உள்ளன. சாப்பிடும் காய்கறி மற்றும் பழங்களை நீரில் அலசி சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டாகும். குறிப்பாக பழங்களை சாப்பிடுவதற்கு முன் நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் உடலுக்கு நிறைய நலன்கள் கிடைக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன.

பழங்களின் மேல் தெளிக்கப்பட்டு இருக்கும் பூச்சி கொல்லிகள், உரங்கள் ஆகியவற்றை நீக்க பழங்களை நீரில் ஊற வைப்பது சிறந்த வழியாகும். அவ்வாறு செய்தால் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

கண் எரிச்சல், சரும பிரச்சினைகள், சுவாச கோளாறுகள் போன்ற பாதிப்புகள் உருவாவதற்கு முக்கிய காரணமே இந்த வகையான பூச்சி கொல்லிகள் தான். நீரில் அதிக நேரம் பழங்களை ஊற வைப்பதால் இந்த பிரச்சினைகளை தவிர்த்து விடலாம். பொதுவாகவே பழங்களை வெறும் நீரினால் அலசுவது சிறந்த முறையல்ல. அதற்கு மாறாக 3 முதல் 4 மணி நேரம் நீரில் ஊற வைப்பது சிறந்தது. இவ்வாறு செய்வது உடல் ஆரோக்கியத்தை நலமாக வைத்து கொள்ளும்.

இதுபோன்று நீரில் ஊற வைப்பதால் பழங்களின் தட்பவெப்பம் சீராக இருக்கும். குறிப்பாக இவை வெப்ப நிலையை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளலாம். பப்பாளி, மாம்பழம், தர்பூசணி போன்ற பழங்கள் அதிக அளவில் வெப்பத்தை உற்பத்தி செய்யும். இவ்வாறு நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் நமது உடலில் இவை வெப்பத்தை உருவாக்காமல் பார்த்து கொள்ளலாம். இது போன்று பழங்களை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் செரிமான கோளாறுகளை தடுக்க முடியும். மேலும், வயிற்று போக்கு, நோய் தொற்றுகள் ஏற்படாமல் இருப்பதையும் இதனால் தடுக்க இயலும்.

Next Story