சிறப்புக் கட்டுரைகள்

சிறுநீரகத்துக்கு ஏற்ற உணவுகள் + "||" + Foods that are kidney-friendly

சிறுநீரகத்துக்கு ஏற்ற உணவுகள்

சிறுநீரகத்துக்கு ஏற்ற உணவுகள்
உடலில் உள்ள நச்சுக்கள், கழிவு பொருட்களை வெளியேற்றுவதில் சிறுநீரகங்களின் பங்களிப்பு இன்றியமையாதது.
ரத்தத்தை சுத்திகரிக்கும் பணியையும் மேற்கொள்கிறது. சிறுநீரகங்கள் சரியாக செயல்படுவதற்கு போதுமான அளவு தண்ணீர் பருகுவது அவசியமானது. உடலில் உள்ள கழிவுகளில் பெரும்பகுதி சிறுநீரகங்கள் வழியாக வெளியேற்றப்படுவதால் அதன் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் சிறுநீரகங்களில் நச்சுகள் படிந்து நோய்தொற்று ஏற்படக் கூடும். அதன் காரணமாக சிறுநீரகங்கள் பாதிப்புக்குள்ளாகி ஒட்டுமொத்த உடல் இயக்கமும் தடை பட்டுவிடும்.

சிறுநீரகத்தை பாதுகாக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா?

* காலையில் தேநீர் பருகினால்தான் பெரும்பாலானோருக்கு சோம்பல் நீங்கி புத்துணர்வு ஏற்படும். தலைவலியை போக்கும் பானமாகவும் நிறைய பேர் கருது கிறார்கள். சிறுநீரகங்களை சுத்தப்படுத்தவும் தேநீர் உதவுகிறது. தினமும் ஒரு கப் தேநீர் பருகுவது சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். குப்பைமேனி இலை, துளசி போன்ற மூலிகைகளை கொண்டு தேநீர் தயாரித்து பருகுவது நல்லது.

* செர்ரி பழ வகைகளை சாப்பிட்டு வருவதும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும். தொடர்ந்து இரண்டு வாரங்கள் செர்ரி மற்றும் கிரான்பெர்ரி பழங்களை சாப்பிட்டு வருவதன் மூலம் சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய் தொற்று குறைய தொடங்கும். இதனை உலர்ந்த பழமாகவும் உட்கொள்ளலாம். சாலட்டுகளாக தயார் செய்தும் சாப்பிடலாம். இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து உடலை தற்காத்துக்கொள்ள வழிவகை செய்யும்.

* எலுமிச்சை, ஆரஞ்சு, முலாம் பழங்களில் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. அதனை ஜூஸாக பருகிவந்தால் சிறுநீரகத்தில் கலந்திருக்கும் நச்சுக்கள் வெளியேறும். சிறுநீரக கற்கள் படியாமலும் பாதுகாக்கலாம். இவற்றில் ஏதாவது ஒரு ஜூஸை தினமும் பருகுவது நல்லது. உப்போ, சர்க்கரையோ சேர்க்காமல் பருக வேண்டும்.

* கீரை வகைகளையும் தவிர்க்காமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவற்றில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்சிடெண்ட், வைட்டமின், தாதுக்கள் போன்றவை சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். எனினும் அளவுக்கு அதிகமாக உட்கொள்வது சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுத்துவிடும்.