பேஜ் இண்டஸ்ட்ரீஸ் லாபம் 11 % குறைந்தது


பேஜ் இண்டஸ்ட்ரீஸ் லாபம் 11 % குறைந்தது
x
தினத்தந்தி 20 Aug 2019 7:56 AM GMT (Updated: 20 Aug 2019 7:56 AM GMT)

பேஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஜூன் காலாண்டில் ரூ.111 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.124 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 11 சதவீதம் குறைந்து இருக்கிறது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 2.4 சதவீதம் அதிகரித்து (ரூ.815 கோடியில் இருந்து) ரூ.835 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த லாபம் ரூ.187 கோடியாக குறைந்து இருக்கிறது.

இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, பங்கு ஒன்றுக்கு ரூ.51-ஐ இடைக்கால டிவிடெண்டாக அறிவித்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில், திங்கள்கிழமை அன்று பேஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கு ரூ.18,268.80-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.18,310.15-க்கும், குறைந்தபட்சமாக ரூ.18,116.75-க்கும் சென்றது. இறுதியில் ரூ.18,190.80-ல் நிலைகொண்டது.

Next Story