வானவில் :ஹோண்டா சி.பி.150 எம்.


வானவில் :ஹோண்டா சி.பி.150 எம்.
x
தினத்தந்தி 21 Aug 2019 7:57 AM GMT (Updated: 21 Aug 2019 7:57 AM GMT)

ஹோண்டா நிறுவனம் சர்வதேச ஜப்பானிய மோட்டார் சைக்கிள் (யு.ஜே.எம்.) தயாரிப்பு அடிப்படையில் ஹோண்டா சி.பி. 150 எம் என்ற நவீன மாடல் பைக்கை தயாரித்துள்ளது.

சாகச பயணங்களுக்கேற்ப தயாரிக்கப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிள் யமஹா நிறுவனத்தின் தயாரிப்பான எம்.டி 15 டிரேசர் மாடலுக்கு போட்டியாக தயாரிக்கப்பட்டுள்ளது. சி.பி. 150 எம். என்ற பெயரில் தாய்லாந்தில் இந்த மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சி.பி. 150 ஆர். ஸ்ட்ரீட்ஸ்டெர் மாடலை அடிப்படையாகக் கொண்டது.

இந்த மோட்டார் சைக்கிளில் மேலிருந்து கீழாக வடிவமைக்கப்பட்டுள்ள 41 மி.மீ. போர்க், நீண்ட தூர பயணத்துக்கு மிகவும் ஏற்றது. பின்பகுதியில் மோனோ ஷாக்அப்சார்பர் உள்ளது. இது அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலானது. அனைத்துக்கும் மேலாக இதன் ஹேண்டில்பார் ஓட்டுநரின் வசதிக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் சிறப்பாக உள்ளது.

இந்த மாடல் மோட்டார் சைக்கிளை ஹோண்டா நிறுவனத்தின் இத்தாலிய ஆராய்ச்சி, வடிவமைப்பு பிரிவு உருவாக்கிஉள்ளது. இது 149 சி.சி. என்ஜின் உள்ளது. நிறுவனத்தின் டி.ஓ.ஹெச்.சி. லிக்விட் கூல்டு என்ஜின் 17.1 பி.எஸ். திறன் 14.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை கொண்டது. 6 கியர்களைக்கொண்டது.

இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வசதி கொண்டது. இளைஞர்களை வெகுவாகக் கவரும் இந்த மோட்டார் சைக்கிள் விரைவிலேயே இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று தெரிகிறது.

Next Story