வானவில் :ஸ்கோடா கோடியாக், சூபர்ப் கார்ப்பரேட் எடிஷன்


வானவில்  :ஸ்கோடா கோடியாக், சூபர்ப் கார்ப்பரேட் எடிஷன்
x
தினத்தந்தி 2 Oct 2019 10:54 AM GMT (Updated: 2 Oct 2019 10:54 AM GMT)

சொகுசு கார்களைத் தயாரிக்கும் ஸ்கோடா நிறுவனம் தனது செடான் கார்களான கோடியாக் மற்றும் சூபர்ப் மாடலில் கார்ப்பரேட் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.

கோடியாக் மாடலின் விலை சுமார் ரூ.32.99 லட்சமாகும். சூபர்ப் மாடல் விலை சுமார் ரூ.25.99 லட்சமாகும். இதில் ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்ட வேரியன்ட் விலை சுமார் ரூ.28.49 லட்சமாகும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சூபர்ப் மாடலில் கார்ப்பரேட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டது. அது 1.8 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலாகும். மானுவல் கியர் வசதியுடன் 6 கியர்களைக் கொண்டதாக இது அறிமுகமானது. இப்போது ஸ்கோடா உரிமையாளர்கள் மட்டுமின்றி பலரும் இந்த மாடலை வாங்க வழி ஏற்பட்டுள்ளது. 180 ஹெச்.பி. திறன், 1.8 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் உடையது. இதில் டீசல் மாடல் 7 கியர்களுடன் 177 ஹெச்.பி. திறன் உடையதாக வந்துள்ளது.

இரண்டு மாடலுமே டியூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதி கொண்டவை. கோடியாக் மாடல் 7 கியர்களுடன் வந்துள்ளது. இது 150 ஹெச்.பி. திறன் கொண்டது. 2.0 லிட்டர் என்ஜினைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாடலுமே ஒருமித்த வடிவமைப்பைக் கொண்டுள்ளன. இவற்றில் மூன்று ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் வசதி உள்ளன. டிரைவர் இருக்கை பவர் அட்ஜெஸ்ட்மென்ட் வசதி உடையது. 8 அங்குல தொடுதிரை மிரர் லிங்க், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே ஆகிய இணைப்பு வசதிகளைக் கொண்டது.

இ.எஸ்.சி. மற்றும் ஏர்பேக் ஆகியன பாதுகாப்புக்கு உள்ளன. கோடியாக் மாடலில் 9 ஏர்பேக்கும், சூபர்ப் மாடலில் 8 ஏர் பேக்கும் உள்ளன. செக்கோஸ்லோவாகியாவைச் சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் கோடியாக் கார்ப்பரேட் எடிஷனின் விலையை முந்தைய மாடல் விலையுடன் ரூ.2.38 லட்சம் குறைவாக நிர்ணயித்து உள்ளது. சூபர்ப் மாடல் விலை ரூ.1.80 லட்சம் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Next Story