வானவில் : ஒரு சக்கர பேட்டரி ஸ்கூட்டர்


வானவில் : ஒரு சக்கர பேட்டரி ஸ்கூட்டர்
x
தினத்தந்தி 9 Oct 2019 10:45 AM GMT (Updated: 9 Oct 2019 10:45 AM GMT)

போக்குவரத்துக்கான வாகனங்களை உருவாக்குவதில் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து வந்து கொண்டுதான்இருக்கின்றன. இப்போது போக்குவரத்து வாகனங்களுடன் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த சிந்தனையும் அதிகரித்து வருகிறது.

பேட்டரி வாகனங்கள் உருவாக்கத்தில் நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே பேட்டரி ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்கள் வந்துள்ள நிலையில் இப்போது ஒரு சக்கரத்தில் ஓடும் ஸ்கூட்டரை அமெரிக்க நிறுவனம் உருவாக்கியுள்ளது. ‘மோட்டோ போகோ’ என்ற பெயரில் வந்துள்ள இந்த ஸ்கூட்டரில் ஒருவர் உட்கார்ந்து செல்லலாம்.

இதில் கைரோஸ்கோபிக் தொழில்நுட்பம் உள்ளது. அதாவது தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை எப்படி அசைத்தாலும் அது எழுந்து நிற்பதைப்போன்று இந்த ஸ்கூட்டரின் ஹேண்டில்பாரை எப்படி திருப்பினாலும் கீழே விழாத வகையில் பேலன்ஸ் செய்து கொள்ளும். இதனால் கீழே விழுந்துவிடுவோம் என்ற அச்சம் தேவையில்லை.

இதில் 60 வோல்ட் 10 ஆம்பியர் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. இது 500 வாட் பிரஷ்லெஸ் மோட்டாருக்கு தேவையான மின்சாரத்தை அளிக்கும். இதனால் இதை ஒரு முறை சார்ஜ் செய்தாலே 5 மணி நேரம் வரை ஓடும்.

அதாவது இதில் 30 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம். இப்போது அமெரிக்காவில் வந்துள்ள இந்த ஸ்கூட்டர் விரைவிலேயே இந்தியாவிலும் வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமடைந்துள்ளன. அருகில் உள்ள கடைகளுக்கு கார் அல்லது மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்வதை விட, இதுபோன்ற ஸ்கூட்டரை எடுத்துச் செல்வதன் மூலம் சுற்றுச் சூழலையும் காக்கலாம். இதன் விலை சுமார் ரூ.71,000.

Next Story