சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : எல்.ஜி.யின் திங்க் கியூமற்றும் எல்.ஜி. கியூ 60 + "||" + Vanavil : LG's Think Q and LG's Q 60

வானவில் : எல்.ஜி.யின் திங்க் கியூமற்றும் எல்.ஜி. கியூ 60

வானவில் : எல்.ஜி.யின் திங்க் கியூமற்றும் எல்.ஜி. கியூ 60
எல்.ஜி. நிறுவனம் 3 கேமராக்களைக் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ‘ஜி 8 எஸ் திங்க் கியூ’ என்ற பெயரில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.36,990 ஆகும்.
ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் இதில்  உள்ளது. இது 6.2 அங்குல புல் ஹெச்.டி. மற்றும் ஓலெட் திரையைக் கொண்டது. இதில் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் மற்றும் ஆண்ட்ராய்டு பை இயங்கு தளம் உள்ளது. இதன் பின்புறம் உள்ள மூன்று கேமராக்களில் முதலாவது 12 மெகா பிக்ஸெல்லைக் கொண்டது. இரண்டாவது 13 மெகா பிக்ஸெல்லைக் கொண்டது. மூன்றாவது கேமரா 12 மெகா பிக்ஸெல் டெலி போட்டோ லென்ஸைக் கொண்டது. செல்பி பிரியர்களுக்கென இதன் முன்பகுதியில் 8 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. விரல் ரேகை உணர் சென்சார் மற்றும் பேஸ் அன்லாக் வசதி கொண்டது. இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர் உள்ளதால் மிகச் சிறப்பான இசையைக் கேட்டு மகிழ முடியும். நீர் மற்றும் தூசு படியாத நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. புளூடூத் இணைப்பு, ஜி.பி.எஸ்., என்.எப்.சி., யு.எஸ்.பி. டைப் சி போர்ட் இணைப்பு உள்ளிட்ட அனைத்து ஸ்மார்ட்போன் அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இதில் 3,550 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. விரைவாக சார்ஜ் ஆக 3.0 நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கண்கவர் கருப்பு நிறத்தில் இது விற்பனைக்கு வந்துள்ளது.

எல்.ஜி. கியூ 60

கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி. நிறுவனம் மிகவும் உறுதியான 3 கேமராக்களைக் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திஉள்ளது. 6.26 அங்குலம் கொண்ட புல் விஷன் டிஸ்பிளே உடையதாக, ராணுவத்தினர் பயன்படுத்தும் வகையில் மிகவும் உறுதியானதாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.13,490 ஆகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் சர்வதேச மின்னணு கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த ஸ்மார்ட்போன் தற்போது விற்பனைக்கு அறிமுகமாகி உள்ளது. 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டது. மீடியாடெக் ஹீலியோ பி22 எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் உடைய இந்த ஸ்மார்ட்போனில் 16 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. முன்புறத்தில் 13 மெகாபிக்ஸெல் கேமரா உள்ளது. இரண்டு சிம் கார்டு பயன்படுத்தும் வசதி கொண்டது.

இதில் சரவுண்ட் சிஸ்டம் உள்ளதால் அழைப்புகள், மறுமுனையில் பேசுபவர்களின் உரையாடல் துல்லியமாகக் கேட்கும். அதிர்வுகளைத் தாங்கும் வகையிலும், உயர் வெப்ப நிலை, கடும் குளிர் உள்ளிட்டவற்றை தாக்குப்பிடிக்கும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பின்பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக இதில் 3,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. நீல நிறத்தில் இது வந்துள்ளது.