அழைப்பு உங்களுக்குத்தான்


அழைப்பு உங்களுக்குத்தான்
x
தினத்தந்தி 14 Oct 2019 6:03 AM GMT (Updated: 14 Oct 2019 6:03 AM GMT)

கோரக்பூரில் உள்ள எய்ம்ஸ் கிளையில் பேராசிரியர் போன்ற பணியிடங்களுக்கு 124 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

எய்ம்ஸ்
அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் இதன் கிளைகள் செயல்படுகிறது. தற்போது கோரக்பூரில் உள்ள எய்ம்ஸ் கிளையில் பேராசிரியர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், கூடுதல் பேராசிரியர் போன்ற பணியிடங்களுக்கு 124 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அனஸ்தீசியாலஜி, அனட்டாமி, பயோகெமிஸ்ட்ரி, கம்யூனிட்டி மெடிசின், டெர்மடாலஜி, இ.என்.டி., ஜெனரல் மெடிசின், ஜெனரல் சர்ஜரி, ரேடியோ தெரபி உள்பட 24 மருத்துவ பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. பணியிடங்கள் உள்ள பிரிவில் முதுநிலை மருத்துவம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய அறிவிப்பு செப்டம்பர் 21-ந் தேதி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது பற்றிய விவரங்களை
www.aiimsjodhpur.edu.in
என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

கப்பல் தளம்
கொச்சியில் உள்ள கொச்சின் ஷிப்யார்டு கப்பல்தளத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டர், சேப்டி அசிஸ்டன்ட், பயர்மேன் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 132 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 30 வயதுக்கு உட்பட்ட விண்ணப்ப தாரர்களுக்கு பணிகள் உள்ளன. 10-ம்வகுப்பு படித்தவர்களுக்கு சேப்டி அசிஸ்டன்ட், தீயணைப்பு வீரர் போன்ற பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. ஹெல்த் இன்ஸ்பெக்டர் டிப்ளமோ படித்தவர்கள் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் அக்டோபர் 18-ந் தேதியாகும். இது பற்றிய விவரங்களை
www.cochinshipyard.com
 என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

ஒளிபரப்பு நிறுவனம்
பி.இ.சி.ஐ.எல். என சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய ஒளிபரப்பு பொறியியல் நுட்ப நிறுவனத்தில் ஆபரேசன் தியேட்டர் டெக்னீசியன், ஆபரேசன் தியேட்டர் அசிஸ்டன்ட் போன்ற பணிகளுக்கு 53 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு, ஆபரேசன் தியேட்டர் டெக்னிக்ஸ் டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து நொய்டாவில் உள்ள பி.இ.சி.ஐ.எல். நிறுவன முகவரிக்கு விண்ணப்பம் அனுப்பலாம். விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் அக்டோபர் 25-ந் தேதியாகும். இது பற்றிய விவரங்களை
www.becil.com
என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

சுப்ரீம் கோர்ட்டு
இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் சீனியர் பெர்சனல் அசிஸ்டன்ட் மற்றும் பெர்சனல் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 58 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பெர்சனல் அசிஸ்டன்ட் பணிக்கு 27 வயதுக்கு உட்பட்டவர்களும், சீனியர் பெர்சனல் அசிஸ்டன்ட் பணிக்கு 32 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்புடன், நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் சுருக் கெழுத்தில் குறிப்பெடுக்கத் தெரிந்தவர்களாகவும், 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை
www.sci.gov.in
இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு அக்டோபர் 24-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

நிலக்கரி நிறுவனங்கள்
சென்டிரல் கோல் பீல்டு நிறுவனத்தில் ஜூனியர் ஓவர்மேன் பணிக்கு 75 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஓவர்மேன் சான்றிதழ் பெற்றவர்கள், கியாஸ் டெஸ்டிங், முதலுதவி பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை
www.centralcoalfields.in
என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு நவம்பர் 10-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதேபோல ஈஸ்டன் கோல்பீல்ஸ்ட் நிறுவனத்தில் அக்கவுண்டன்ட் பணிக்கு 57 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ. படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. இது பற்றிய விவரங்களை
www.easterncoal.gov.in
என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு அக்டோபர் 23-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

இக்னோ பல்கலைக்கழகம்
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர், பேராசிரியர், இணை பேராசிரியர் போன்ற பணியிடங்களுக்கு 65 போ் தேர்வு செய்யப்படுகிறார்கள். முதுநிலை படிப்புடன் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 31-ந் தேதி கடைசிநாளாகும். மற்றொரு அறிவிப்பின்படி உதவி பேராசிரியர் பணிக்கு 551 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணி களுக்கு அக்டோபர் 20-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை https://ignourec.samarth.edu.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story