சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : மெர்சிடஸ் பென்ஸ் ஜி. 350 டி + "||" + Vanavil : Mercedes Benz G 350 T

வானவில் : மெர்சிடஸ் பென்ஸ் ஜி. 350 டி

வானவில் :  மெர்சிடஸ் பென்ஸ் ஜி. 350 டி
சொகுசு கார்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தனது ஜி சீரிஸில் 350 டி மாடலை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.1.5 கோடியாகும்.
 3 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் என்ஜினைக் கொண்டதாக வந்து உள்ளது. 286 ஹெச்.பி. திறன், 600 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது.

இது பாரத் புகைவிதி 6-க்கு ஏற்ப உருவாக்கப்பட்டு உள்ளது. நான்கு சக்கர சுழற்சி கொண்டதாகவும் 9 கியர்களைக் கொண்ட ஆட்டோமேடிக் கியர் பாக்ஸை உடையதாகவும் இது உருவாக்கப்பட்டு உள்ளது. 2,500 கிலோ எடை கொண்ட இந்த எஸ்.யு.வி. மாடல் 100 கி.மீ. வேகத்தை 7.4 வினாடிகளில் எட்டிவிடும் திறன் பெற்றது. இதில் எலெக்ட்ரோ மெக்கானிக்கல் ஸ்டீரிங் உள்ளது.

முன்புறத்தில் விஷ்போன் சஸ் பென்ஷன், ஆக்சில் செட்டப் பின்புறமும் கொண்டது. இதன் உள்புறம் 12.3 அங்குல திரை கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. குரூயிஸ் கண்ட்ரோல், ஆட்டோ எல்.இ.டி. முகப்பு விளக்கு, மூன்று அடுக்கு கிளைமேட் கண்ட்ரோல் வசதி, போதிய வெளிச்சத்தை அளிக்கும் சென்சார் உள்ளிட்டவற்றோடு பாதுகாப்பு அம்சமாக இதில் 8 ஏர் பேக்குகள் உள்ளன.

இது முழுவதும் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஆண்டுக்கு 2,500 கார்களை இறக்குமதி செய்து கொள்ள மத்திய அரசு சமீபத்தில் விதிகளை தளர்த்தியது. இதையடுத்தே தற்போது இத்தகைய சொகுசு மாடலை இறக்குமதி செய்ய இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.