வானவில் : கவாஸகி இஸட். ஹெச்.2


வானவில் :  கவாஸகி இஸட். ஹெச்.2
x
தினத்தந்தி 30 Oct 2019 4:49 AM GMT (Updated: 30 Oct 2019 4:49 AM GMT)

ஜப்பானின் கவாஸகி நிறுவனம் புதிதாக சாகசப் பயணத்துக்கேற்ற இஸட்.ஹெச் 2 மாடல் மோட்டார் சைக்கிளை காட்சிப்படுத்தி உள்ளது.

சூப்பர் பைக் வரிசையில் இடம்பெற்றுள்ள இந்த மோட்டார் சைக்கிள் டோக்கியோவில் நடைபெறும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. பார்ப்பதற்கே கம்பீரமான தோற்றம், எல்.இ.டி. முகப்பு விளக்கு உள்ளிட்ட வடிவமைப்புகளோடு ஸ்ட்ரீட்பைட்டர் மோட்டார் சைக்கிளுக்கான தோற்றத்தைக் கொண்டுள்ளது.

மிகப் பெரிய அளவிலான பெட்ரோல் டேங்க் இந்த மோட்டார் சைக்கிளுக்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது. இதில் டிரெலிஸ் ரக பிரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதிலும் பிரேம் மட்டுமே பச்சை நிற தோற்றத்தில் இருப்பது வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. இந்த மோட்டார் சைக்கிள் 11,000 ஆர்.பி.எம். வேகத்தில் 200 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கவாஸகி நின்ஜா ரக மோட்டார் சைக்கிளைப் போன்றதாக உள்ளது. 6 கியர்களைக் கொண்டதாக புதிதாக அப்டவுன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் நான்கு விதமான ஓட்டும் நிலைகள் (சாலை, மழைக்காலம், ஸ்போர்ட் மற்றும் ரைடர்) உள்ளன. இதேபோல மூன்று வகையான பவர் மோட் (புல் 200 ஹெச்.பி.), நடுத்தரம் (148 ஹெச்.பி.), குறைவு (98 ஹெச்.பி.) ஆகிய நிலைகள் உள்ளன.

இதில் லாஞ்ச் கண்ட்ரோல், டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் வசதிகள் உள்ளன. சாகசப் பயணங்களுக்கு ஏற்றதாக இது உருவாக்கப்பட்டிருந்தாலும், வழக்கமான சாலைகளில் சராசரி மோட்டார் சைக்கிளைப் போல ஓட்ட முடிவது இதன் சிறப்பம்சமாகும்.

இலகுவான எடை, அதிகபட்ச சுழற்சி வசதி கொண்ட ஸ்டீரிங், பின்புறம் சொகுசான சவாரியை உறுதிசெய்யும் மோனோ ஷாக் அப்சார்பர், டிஸ்க் பிரேக் மற்றும் ஏ.பி.எஸ். வசதி. இது ஐ.எம்.யு. தொழில்நுட்பம் கொண்டது.

இதனால் பிரேக் பிடிப்பது கடினமானதாக இருக்காது. விரைவிலேயே இந்த மோட்டார் சைக்கிளை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது கவாஸகி.

Next Story