சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : நான்கு புதிய வேரியன்ட்களில் ஹோண்டா சிட்டி + "||" + Rainbow: Honda City in four new variants

வானவில் : நான்கு புதிய வேரியன்ட்களில் ஹோண்டா சிட்டி

வானவில் :  நான்கு புதிய வேரியன்ட்களில் ஹோண்டா சிட்டி
நடுத்தர ரக செடான் கார்களில் ஹோண்டா சிட்டி காருக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.
இந்த கார் தற்போது பி.எஸ்.6 புகை விதிகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புதுப் பொலிவோடு அறிமுகமாகிறது. இப்புதிய மாடலில் 4 வேரியன்ட்களை ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

பி.எஸ்.6 புகை விதி சோதனைக்கு அனுப்பப்பட்ட இந்த மாடல் கார் அதை பூர்த்தி செய்துள்ளது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பாரத் புகை விதி 6 சோதனையின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள கார் ரகத்தில் ஹோண்டா சிட்டி முதலாவதாகத் திகழ்கிறது. ஏற்கனவே இருசக்கர வாகனங்கள் மட்டுமே இந்த விதிகளின் கீழ் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கார்கள் பிரிவில் ஹோண்டா சிட்டி முதலாவதாக வந்துள்ளது. நான்கு சிலிண்டரைக் கொண்ட இந்த காரின் என்ஜின் 119 ஹெச்.பி. திறன் கொண்டதாகும். முதல் கட்டமாக இந்த மாடலில் மேனுவல் கியர் டிரான்ஸ்மிஷன் கார்களே தயாரிக்கப்பட்டுள்ளன.

தற்போது எஸ்.வி., வி, வி.எக்ஸ்., இஸட்.எக்ஸ். என நான்கு வேரியன்ட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் எஸ்.வி. மாடல் 2 ஏர் பேக்குகளைக் கொண்டுள்ளது. இது ஏ.பி.எஸ்., ரியர் பார்க்கிங் சென்சார், எல்.இ.டி., டி.ஆர்.எல்., 15 அங்குல அலாய் சக்கரத்துடன் வந்துள்ளது. ரிமோட் லாக்கிங், பவர் விங் மிரர், ஆட்டோமேடிக் ஏர் கண்டிஷனர், புளூடூத் ஆடியோ சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல் வசதியும் உள்ளது.

வி மாடலில் 7 அங்குல தொடு திரை, சாவி தேவைப்படாத வசதி மற்றும் பின்புற கேமரா ஆகியன கூடுதலாக இடம்பெற்றுள்ளது. வி.எக்ஸ். மாடலில் சன்ரூப் (மேற்கூரை) வசதி உள்ளது.

டெலஸ்கோப்பிக் ஸ்டீரிங் சக்கரம் அட்ஜெஸ்ட் செய்யும் வகையில், ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர், 16 அங்குல அலாய் சக்கரம் ஆகியவற்றோடு பக்கவாட்டு ஏர் பேக்குகளை கூடுதலாகக் கொண்டுள்ளது. தானாக எரியும் முகப்பு விளக்கு, மழைத்துளி பட்டவுடன் செயல்படும் வைப்பர், சொகுசான இருக்கைகள் ஆகியன கூடுதலாக இஸட்.எக்ஸ். மாடலில் உள்ளன. தற்போது உள்ள மாடலின் விலை சுமார் ரூ.9.81 லட்சம் முதல் ரூ.14.16 லட்சம் வரையில் உள்ளது. புதிய வேரியன்ட்கள் இதைவிட சற்று கூடுதலாக இருக்கும் என்று தெரிகிறது.