சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : வயர்லெஸ் சார்ஜர் + "||" + Rainbow: Wireless charger

வானவில் : வயர்லெஸ் சார்ஜர்

வானவில் :  வயர்லெஸ் சார்ஜர்
ரோபோகி என்ற பெயரில் வந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் வயர்லெஸ் சார்ஜர்.
ஏ.ஐ. தொழில்நுட்பம் உள்ளதால் ஸ்மார்ட்போனை அருகில் கொண்டு சென்றாலே பக்கவாட்டுப் பிடிமானம் விலகிடும். ஸ்மார்ட்போனை வைத்தவுடன் அதை பிடித்துக் கொள்ளும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐ-போன், சாம்சங் கேலக்ஸி உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் அனைத்தையும் இதில் சார்ஜ் செய்யலாம். டேஷ் போர்டில் பொருந்தும் வகையிலும், ஏர் வென்ட்டில் பொருத்தும் வசதியிலும் இது வந்துள்ளது.

குரல் வழி கட்டுப்பாட்டு மூலம் இது செயல்படுவது மிகவும் சிறப்பாகும். இதன் மூலம் ஸ்மார்ட்போனுக்கு இணைப்பு தரும், புளூடூத் இணைப்பு வசதியை உருவாக்கலாம். சுற்றுப்புற இரைச்சலை தவிர்க்கும் திறன் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.4,300.