சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : 85 அங்குல டி.சி.எல். பி8 சீரிஸ் + "||" + Rainbow: 85-inch TCL P8 Series

வானவில் : 85 அங்குல டி.சி.எல். பி8 சீரிஸ்

வானவில் :  85 அங்குல டி.சி.எல். பி8 சீரிஸ்
டி.சி.எல். நிறுவனம் 85 அங்குல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.1,99,999 ஆகும்.
பி8 சீரிஸ் ரகமாக வந்துள்ள இந்த ஸ்மார்ட் டி.வி.க்கு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சிறப்பு சலுகையாக 3 ஆண்டுகள் உத்தரவாதத்தை இந்நிறுவனம் அளித்துள்ளது.

இந்நிறுவனத்தின் பிற தயாரிப்புகளான 43 அங்குல டி.வி. விலை ரூ.24,990, 50 அங்குல டி.வி. விலை ரூ.29,990, 55 அங்குல டி.வி. ரூ.31,990 மற்றும் 65 அங்குல டி.வி. விலை ரூ.49,990, இதில் 65 அங்குல பிரீமியம் மாடல் விலை ரூ.51,990 ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது.

தற்போது அறிமுகம் செய்துள்ள 85 அங்குல பிரீமியம் டி.வி. சுவற்றில் பதிப்பதைப் போன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மைக்ரோ டிம்மிங் எனும் புதிய தொழில்நுட்பம் உள்ளது.

இதில் இருட்டான காட்சிகளை தெளிவாக பார்க்கலாம். இதில் ஏ.யு. பிராசஸர் உள்ளது. 2 ஜி.பி. ரேம் மற்றும் 16 ஜி.பி. நினைவகம் உள்ளது. இதில் கூகுள் பிளே ஸ்டோர் இருப்பதால் அதன் மூலம் தேவையான செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் இதில் நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற வசதிகளும் உள்ளன. இனிய இசையை வழங்க இதில் 4 ஸ்பீக்கர்கள் உள்ளன. இவற்றில் இரண்டு ஸ்பீக்கர்கள் 10 வாட் திறன் கொண்டவை, ஒன்று 5 வாட் திறன் கொண்டது. மற்றவை டால்பி ஸ்டீரியோ இசையை வழங்கக் கூடியவை.

இதில் 2 யு.எஸ்.பி. போர்ட், ஒரு லேன் போர்ட், 3 ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், கேபிள் ஆன்டெனா சாக்கெட், எஸ்.பி.டி.ஐ.எப். கனெக்டர், ஏ.வி. போர்ட், ஹெட்போன் சாக்கெட் ஆகிய அனைத்தும் உள்ளன. இதனால் படங்களை நேரடியாகவே பதிவிறக்கம் செய்து பார்க்க முடியும். இதில் காட்சிகளைப் பார்க்கும் போது திரையரங்கில் படம் பார்ப்பதைப் போன்ற அனுபவம் நிச்சயம் கிடைக்கும் என்று நிறுவனம் உறுதியாகக் கூறுகிறது.